72. எவ்வுயிருந் தம்முயிர்போ லெண்ணியினி தோம்புவதே எம்மீர் மாந்தர் செவ்வியபண் பாகுமெனப் பழந்தமிழ்நூல் இனிதெடுத்துத் தெளிக்கும் ஆனால் இவ்வுலகில் மக்களுக்கா ஏனையுயி ரியன்றுளவா லென்று கூறி அவ்வுயிர்கொன் றுண்டுவரும் ஆரியர்தம் தீச்செயலை யகற்றல் வேண்டும். 73. மிடியர்தமக் குரியவென வொன்றில்லார் பிறருடைமை வேட்டே வாழும் மடியர்நிலை யானவொரு தொழில்செய்யா தாருயிரை வருத்தி யுண்ணும் கொடியர்குடிப் பழக்கமிலாத் தமிழகத்தே முறையின்றிக் குடிக்கும் பொல்லாக் குடியர்அற மல்லாத செய்யாம லேபார்த்துக் கொள்ளல் வேண்டும். 74. உய்த்தணர்வி னோடுலக வழக்கமது தலைப்பெய்தே யுனித்தா ராய்ந்த புத்துணர்வி னாலுள்ள முடையமுது தமிழ்மக்கள் புதுவாழ் வெய்தற் கெத்தகைய துறையினுநன் னாகரிகப் பெருங்கரையி னினிதே யேற வைத்திடுத லேயறியவர் முதற்கடமை யாகுமென வகுத்தே பின்னும். ------------------------------------------------------------------------------------------- 73. மிடியர் - வறியர், நிலையான சொத்தில்லார். மடியர் - சோம்பர். ழுஆரியரின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் முதன்மையான காரியங்கள் மது வருந்துவதும் சூதாடுவதுமாகும். ரிக்வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்களிருக்கின்றனழு - ராகோசின் ‘வேதகால இந்தியா’ | |
|
|