22. பாட்டி யைப்படை வலவனைக் கொன்றவப் பதரைக் காட்டி டைப்பருந் தொடுகழு குண்டுமே களிக்கக் கூட்டி டைப்படு குருவியைப் போல்முனிக் கூட்டம் ஆட்டி டைப்படக் கருவறுப் பேனென வார்த்தான். 23. வெற்றி வேலவ னினையவஞ் சினம்பல விளம்பப் பெற்ற தாயினு மன்புடைத் தமிழரும் பிறழக் கற்றை வார்குழல் கனிமொழிப் பாவையுங் கதிர்வேற் கொற்ற வாவிரு சிறாரறி யாதுசெய் கொலையே. 24. அடுத்த வின்னுயிர் போக்கியூ னுண்பதே யல்லால் அடுத்த மக்களைக் கொல்லுத லவர்கருத் தல்ல தடுத்த தாற்கொலை புரிந்துநம் மன்பினைத் தடுத்தார் எடுத்த வேலினைத் தடுப்பதவ் வாரியர்க் கெளிதோ. 25. ஆகை யாலறி யாதவர் செய்கொலைக் காகச் சாக மற்றவ ரென்றுமே சினப்பது தகவோ வாகை வேலவாங் குரியதிண் காவலை வைத்தால் போக வென்றுசொல் லாமலே போவர்பின் போதார். 26. இறைவி யின்னணங் கூறவே சினந்தணிந் திறையும் முறைமை யன்றுதான் மூடர்க ளெரிசின மூள உறவை வன்கொலை செய்துநம் முறவினை யொழித்தார் அறம லாதபுன் செயலினை யுள்ளநெஞ் சழலும். 27. என்ன மன்னனாங் கிருந்தசான் றோர்தக வென்ன மன்னு மாண்மையஞ் சாமைசே ரருந்தமிழ் மறவர் துன்னி யாரியப் புலைத்தொழி லாயிடைத் துன்னாத் தென்னர் வாழ்வக லாவருங் காப்பினைச் செய்தான். 28. கொல்லி யேயுயிர் துடிதுடித் திடவுணுங் கொடியர் புல்லி யேகொலை வேள்வியா லாருயிர்ப் பொருளைக் கல்லி யேயழித் திடாவகை காத்திடக் காம வல்லி யேவலிற் படவரும் படையையும் வகுத்தான். 29. வகுத்த மாப்படைத் தலைவனைப் பார்த்துமா மன்னன் வகுத்த வேள்வியை விலக்கியே ஆரிய மன்னர் அகத்து றாதெலைப் புறமதைக் காத்துமற் றவரைப் பகைத்தி லாதுபே ரன்பொடு காக்குவீர் பரிவாய். ------------------------------------------------------------------------------------------- 22. ஆடுதல் - வெல்லுதல். | |
|
|