பக்கம் எண் :


இராவண காவியம் 35

   
     இந்தப் பாடல்களின் வெற்றிக் குறிப்பினையும், சொற்சிற்பத்தையும்
தமிழிலக்கியங்களில் வேறெங்கும் காண்பதரிது. இச்செஞ்சொற்கவியின்பத்தில் மூழ்கித்
திளைக்காதார் யாரே! நூலின் பெருமையைச் சுருங்கச் சொல்வதானால், இதனைத்
தமிழிலக்கியத்தின் சாறு என்றே கூறலாம்.ழு
 
நாரண துரைக்கண்ணன் அவர்கள்
(‘பிரசண்ட விகடன்’ ஆசிரியர்)
     ழுதமிழ் இலக்கியத்தின் அணிகலமாய் இருக்கத்தக்க அருமையான காவிய நூல் -
இராவண காவியம்.ழு
 
காஞ்சி மணிமொழியார் அவர்கள்
(‘போர்வாள்’ ஆசிரியர்)
     ழுகரும்பு என்றால் சாதாரணக் கரும்பு அல்ல; அது கிடைத்தற்கு அரியது;
ஒவ்வொரு கணுவிலும் ஒரு கடல் இன்பம் செறிந்துள்ள பெற்றிவாய்ந்தது; தேனில் ஊறி
எழும் இன்சுவை, தென்றலில் தவழ்ந்துவரும் ஆனந்தம், யாழில் தெறிக்கும் நல்லிசை,
செந்தமிழில் ஒளிவீசும் கருத்துச் செதில்கள். இவ்வளவையும் கூட்டி எடுத்து வடித்து
இறக்கிய சுவைமிகு பொருள்போன்றது அந்தக் கரும்பின் சாறு. அந்தக் கரும்புக்கு
நாட்டிலே வழங்கும் பெயர் இராவண காவியம் என்பது; தமிழ் மக்கள் உள்ளத்தி்லே
குடியேறிவிட்ட பெயர் திராவிட நாகரிகத்தின் அடையாளச் சின்னம் என்பது.ழு

சொல்லின் செல்வர்
ரா.பி.சேதுப்பிள்ளை அவர்கள்
     ழுதேனினும் இனிய செந்தமிழ்க் குழந்தை! நான் கம்பராமாயணக் கவிச்சுவையில்
கட்டுண்டு கிடந்தனன். தங்கள் இராவண காவியம் அக்கட்டை அவிழ்த்துவிட்டது. கருத்து
மாறுபாடு வேறுழு.
                    
                                                 கம்பராமாயண அன்பர்
புலவர் ஐயன் பெருமான் கோனார் அவர்கள்
     ழுஇனியொரு கம்பனும் வருவானோ இப்படியும் கவிதருவானோ? கம்பனே வந்தான்;
அப்படிக் கவிதையும் தந்தான். ஆனால், கருத்துத்தான் மாறுபட்டது.ழு