48. வாயில் தோறுமவ் வாயி னிருபுறத் தாய வேவறை தோறு மணிமதில் ஞாயில் தோறும் பதண நடுவிலும் போயி ருந்து பொருந்துவ செய்தனர். 49. அடுத்த வாயி லகழின் பலகையை எடுத்து நீள்கிடங் கேணியு நீக்கினர் கடுத்து வெஞ்சினங் கால முதலையைத் தொடுத்து வெங்கட் சுறவுந் துளக்கினர். 50. மாட வாயில் மருங்கி னொழுங்குறக் கூட மேய கொடுமுடி யைந்துகா லோடு நிற்பதை யொத்துவெறிக்களி றூடு றாம லொழுங்கி னிறுத்தினர். 51. ஓவ றாத வுருமென் சினத்தியல் ஏவ றாத விளைய மறவரை மேவு றாது வெருவுற வாரியர் தாவ றாவிளை தன்னிடை வைத்தனர். 52. தாட கையறத் தைக்க விருப்புமுள் கூடை கூடையாக் கொட்டின ரஞ்சியாங் கோடு வோரடி பற்றி யொழுக்கறக் காடெ லாந்தெறுந் தோட்டியைக் கட்டினர். 53. வாளை நோக்கி வடவ ரெதிர்வரும் வேளை நோக்கிவை வேலினை நோக்கிவன் றோளை நோக்கிவெந் தும்பையை நோக்கிவெங் காளை நோக்கினர் கன்றி யிருந்தனர். 54. புகல டைந்தவப் புல்லர்கள் தம்மொடு தொகைய டைந்த துணைவலி யாரியர் நகர டைந்தனர் முற்றினர் ஞாயிறைப் பகைய டைந்த பனித்தொகை போலவே. ------------------------------------------------------------------------------------------- 48. ஏவறை - நுலவுகாற் சுவரிலுள்ள அறை. ஞாயில் - மதில் முடியிலுள்ள ஏவறை. பதணம் - ஏவறைக்கு மேலே மதில் முடியிலுள்ள மதிலுள்மேடை. 50. ஊடு உறாமல் - பகைவர் உள் நுழையாதிருக்க. 51. ஓவறாத - இடையறாத. உருமு - இடி. ஏவு - அம்பெய்தல். தா - வலி. இளை - காவற்காடு. 52. தாள் தகை அற - கால் தகுதி கெட. ஒழுக்கு அற - ஓட்டங்கெட. தெறும் - வருத்தும். தோட்டி - இரும்புக்கொக்கி. | |
|
|