7. நைக லந்தசொ லின்ன நவின்றுமே கைக லந்திகல் கண்ணற வொன்றென மெய்க லந்தொளிர் வேலினும் வாளினும் வைக லந்தவி லானு மலைந்தனர். 8. கைய றுந்தன கால்க ளறுந்தன மெய்ய றுந்தன மேனி சிதைந்தன தையி ருந்த தலைபனங் காயெனப் பொய்யி ருந்த வுடலம் புரண்டன. 9. இப்ப டிக்கவ் விருபடை வெள்ளமும் கைப்பி டித்துக் கனன்று பொருதவே எப்பு றத்து மிரும்பிணக் குன்றுறத் தெப்ப மிட்டரி தேங்கின சோரியே. 10. இற்ற கைகளுங் கால்களு மெண்ணில உற்று நீந்தியவ் வொண்குரு திக்கடல் செற்ற வின்னுயிர் சேறிய மீனுருப் பெற்ற தாமெனப் பேர்ந்து பிறழ்ந்தவே. 11. பந்த ரிட்டுப் பறந்து கழுகினம் வந்து வெண்ணினம் வாய்மடுத் தேகின சிந்து சோரி விழுக்கொடு தின்னவே முந்து குள்ள நரிகளு மொய்த்தன. 12. ஈட்டி யன்ன விலைமுள் ளடர்புறங் காட்டி லின்னலர் கால்பெயர் கின்றியே தோட்டி யீர்ப்பத் துதைந்த விருப்புமுள் மாட்டக் குப்புற மண்கவ்வி வீழ்குவர். 13. வலையில் வீழ்மட மானினை யாரியர் சிலையை வாங்கி யுயிரைச் செகுத்தல்போல் நிலைபெ யர்ந்திடா நீட்டிய வூனரைக் கொலைவை வேல்கொடு குத்தித் துரத்துவர். ------------------------------------------------------------------------------------------- 7. நை - இகழ்ச்சி. கண்ணற - இடைவெளியின்றாக. 8. மெய் - தோல். தை - அணி. பொய் இருந்த - உயிரற்ற. 9. அரி - கடல், கடல் போல. சோரி - குருதி. 11. வெள்நிணம் - கொழுப்பு. விழுக்கு - தசை. 13. வாங்கி - வளைத்து. நீட்டிய - நிலத்தில் சாய்ந்த. | |
|
|