15. தூதுவ னெடுத்துச் சொன்ன தூயசெந் தமிழை யேனும் பாதுகாத் திருப்பே னாகிற் பகைகெட வுறவு தாங்கி மாதினை யடைந்தே முன்போல் மனமகிழ்ந் திருப்பே னன்றோ ஏதினிச் செய்வே னெம்பி யிடரினை யெதிர்கொண் டேனே. 16. ஆவது மாகற் கேற்ற தறிவது மழிந்து சிந்திப் போவதும் போகற் கேற்ற புலமையும் பொருந்தா வீணர் ஓவது புரிது மண்மே லொழிகுவ ரென்னு முண்மைக் கேவது புரிந்து நானே யிலக்கிய மானே னந்தோ. 17. இன்னபற் பலவுங் வறி யினைந்துமே புலம்ப ராமன் பின்னவ னண்ணா வீது பெரியவர் செய்கை யாமோ நின்னருந் திறலி னோட நிலையையு மெண்ணிப் பாரா தின்னலுற் றிரங்கி யேங்க லேழைமைப் பால தன்றோ. 18. மண்டிய துன்ப மேன்மேல் வருகினு மவற்றைத் தேடிக் கொண்டபே ரின்ப மாகக் கோடலே யவற்றை வென்றி கண்டதா முலைவி லாத கடுந்திற லவர்கட் கென்று பண்டையோ ருரைக்கு முண்மை பயின்றறி யீரோ வென்ன. 19. தேற்றியே யிருக்கும் போது செழுந்தமிழ்த் தலைவ ரெல்லாம் போற்றிய பெருமை விட்டுப் புகழொடு மானங் கெட்டு மாற்றலர்க் கடிமை யாகி வண்டமிழ் வாழ்வை யன்னார்க் கேற்றியே யுரிமை கொன்ற விரண்டக னாங்கு வந்தான். 20. கண்டது மறவ ரெல்லாங் கருக்கென விருக்கென் றோட்டங் கொண்டன ரவரை மற்றோர் கோடரிக் காம்பு தேற்ற அண்டின ரெனினு மன்னா ரச்சமற் றிருந்தா ரல்லர் தண்டமி ழவரென் றோர்புற் சருக்கெனில் விருக்கென் பாரே. 21. இரண்டகன் றன்னைத் தானே யிணையென வினிமை யெல்லாந் திரண்டசெந் தமிழர் வாழ்வின் றெளிபய னெனும்பூ வைக்குங் கரண்டக மெனவே வந்து காத்தருள் தருஞ்சே யோனென் றருண்டன ரென்னி னன்னோ னருந்திறற் கிணையா தென்கோ. 22. முன்னவன் றன்னை வீழ்த்தி முறையுட னரசு பெற்ற பின்னவா வென்னால் நீயும் பேரஞ ருற்றாய் பாவம் உன்னருஞ் சேனை சூழ வுனதுநா டடைந்து நீயும் இன்னலங் துய்ப்பா யென்ன வினைந்துவில் லவனுங் கூற. ------------------------------------------------------------------------------------------- 19. இரண்டகன் - பீடணன். 20. கோடரிக்காம்பு - சுக்கிரீவன். 21. கரண்டகம் - பூக்குடலை. | 13. பாடியை யடைந்தி ராமன் பாவியேன் கெட்டே னெம்பி கோடிநாட் பழகி னாலுங் கொடிதவ ழிலங்கை மைந்தன் ஆடிய லேவக் கல்வி யறிந்திட முடியு மோதான் பீடணற் குறைத்த மாற்றம் பிழைத்திடும் போலு மன்றோ. 14. அன்றவன் சொன்ன வாறே யருந்தமி ழிலங்கை வேந்தன் முன்றிலை யடைந்தே மென்னில் மொய்குழல் தன்னைக் கூடி இன்றியாம் பட்ட துன்ப மின்றியே யயோத்தி தன்னைச் சென்றடைந் திருப்பே மன்றோ சிறுமதி யாற்கெட் டேனே. ------------------------------------------------------------------------------------------ 9. முதுகர் - தோற்றவர். உறந்து - விரைந்து. 13. ஆடுஇயல் - வெல்லும். ஏவக்கல்வி - விற்றொழில். 14. அவன் - அனுமன். | |
|
|