6. எதிர்சென்றன னதுகண்டது மிடியேறென வுறுமிக் கதிர்வேலினுக் கெதிரேசுடு கணைதூவியே வருவோன் வெதிரும்படி யவனும்பெரு வில்வாங்கியே சுடுகோல் உதிரும்படி விடுமுன்னிவை யுரைசெய்குத லானான். 7. வடவாரிய வொருநாளிலும் வந்தோமிலை யுமது வடவாரிய மானாலுமுன் மரபோடும் தையும் கடனாகவே தமிழோர்கொலை கைக்கொண்டனர் நீயும் படநாகம தானாயல பழியும்பல கொண்டாய். 8. பகையின்றியே யயலாரகம் பண்பின்றியே மன்னர் புகலாகுமோ நாடோடிகள் போலப்புகுந் தாலும் தகையின்றியே யதையாளுவோர் தமரைக்கொலை செய்து வகையின்றியே பகைகொண்டலை மடவோர்களு முண்டோ. 9. புலையுண்பதும் பிறிதோருயிர் பொன்றப்புல மின்றிக் கொலைசெய்வதுங் கூடாதெனல் குற்றங்குறை யென்னில் அலையுண்டிடு முயிர்காவல ராவார்செல வின்றே சிலைவாவுல காள்வோர்கொலை செய்வோர்களோ சொல்லும். 10. உளபோலவே யிலவாகிடு முடலோம்புதல் வேண்டி வளமார்தமிழ் மக்கட்குடை மாடாடுகள் தம்மைக் களவாடியே யுணனன்னடை காணாவென வோதல் பளகாகுமோ வடவாரிய முறையோவிது பகர்வாய். 11. ஒருகுற்றமு மறியாவெம துற்றோரையு முற்றோர் பருகுற்றன ரந்தோசுடு பகழிப்பகை யாலே அருகுற்றது பிழையோமுதி யாளோடிளை யாளும் திருகுற்றிட வின்னாதென செய்தாரட பாவீ. 12. பெண்ணுக்கிரங்கா மக்களிப் பெரும்பேருல கத்தில் மண்ணுக்கொரு சுமையாக நீ வந்தெங்குப்பி றந்தாய் கண்ணுக்கவர் மரமோவல கல்லாய்த்தெரிந் தாரோ எண்ணத்தனை யெண்ணாதுசெய் திகல்கொண்டனை மடயா. 13. சிறைவைத்தனி ரென்பாய்கொலுன் றேவிக்கிது காறும் குறைவைத்தன மில்லென்பது கொடியோயறிந் தில்லை இறைவிக்கிணை யாவாள்தமி ழினியார்க்கினி யாளே கறைவைத்தவெம் பின்னோனிடங் கழறித்தெரி வாயே. ------------------------------------------------------------------------------------------- 6. வெதிர்தல் - நடுங்குதல். கோல் - அம்பு. 7. ஐ - தந்தை. அல - அதுமட்டுமல்ல. 10. உணல் - நல்நடை. பளகு - குற்றம். 12. உலகத்து - இல். எண் - எள். 13. இனியார் - மகளிர். கறை - குற்றம். | |
|
|