பக்கம் எண் :


506புலவர் குழந்தை

   
         14.   வாவென்றசொல் லதுகொண்டுநீ வந்தாயிலை பாவி
              ஏவொன்றிய சிறுவன்றமி ழினமொன்றியே வந்து
              தாவொன்றினை யடடாவுன் றலைதப்புவ தினியில்
              கோவென்றில னெனினும்வன் கொலைவென்றிடுங் கொடியா.

         15.   தாதாடிய வண்டோலிடு தண்டாமரை நாடன்
              பேதாய்மொழி பொய்யாமலுன் பெண்பாலொடு செல்லப்
              போதாயென வேயுன்னிடை போதந்திட விட்ட
              தூதாகிய வதிகாயனைச் சொல்லோடுது றந்தாய்.

         16.   மலைவாலியி னுயிருண்டுபின் வலிகொண்டுமே வந்த
              கொலைகாரநீ நேரேதமிழ்க் கோனைப்புக லென்னில்
              நலியாமலுன் மனைதந்து நலஞ்செய்குவ னன்றோ
              புலிவாயக லில்லாவெலி போலாயினை சிறுவா.

         17.   பண்டேவரு முனிவோரடு பசிகொன்றன மல்லால்
              உண்டோகுறை யிதுநாளுமோ ருயிர்கொன்றது முண்டோ
              தண்டாதுண வுண்டேயொரு தமிழ்நாடர்க ளேனும்
              உண்டோவுன துயர்நாடதி லோநன்றியி லாதாய்.

         18.   கொன்னஞ்சர வினிலுங்கழி கொடியோரென வறியாத்
              தின்னுஞ்சுவை யெல்லாமவர் தேக்குண்டு தெவிட்ட
              வன்னெஞ்சரை யினிதூட்டிவ ளர்த்தாகுறு பயனைக்
              கன்னெஞ்சர்க ளேவம்பினாற் கைமேற்பெற லானோம்.

         19.   முனிவோரென வயனாடென முறையேபுறந் தருதல்
              முனிவோரென வெருவித்தவ முதுகோலமா வாழ்வை
              முனிவோரென வுரைதந்தது முடிவாகியே தமிழர்
              முனிவோரென வெதிர்வந்தனர் முறையோவடி யவனே.
 
அறுசீர் விருத்தம்
 
         20.   நான்மறை வேள்வி யென்று நஞ்சினுங் கொடிய நும்மோர்
              ஊன்மறைந் துணற்கு நீயும் உதவியே யுதவி கோடல்
              மேன்முறை யாமோ மக்கள் விரும்பிடுஞ் செயலோ வன்றி
              நூன்முறை யோடு பட்ட நுணங்கிய வறிவு மாமோ.

-------------------------------------------------------------------------------------------
         14. ஏவம், தா - குற்றம். சிறுவன் - சுக்கிரீவன். 16. பின் - சுக்கிரீவன். 18. ஏவு - அம்பு. 19. முறையே - முறையாக. புறந்தருதல் முனிவோர் என - பாதுகாத்தலை வெறுப்பார் என்று. வெருவி - அஞ்சி. வாழ்வை முனிவோர் என உரைத்தது - வாழ்க்கையை வெறுப்பவரென உரைத்தது. முடிவாகி. உண்மையாகி. தமிழர் முனிவோர் - தமிழர் பகைவர்.