பக்கம் எண் :


516புலவர் குழந்தை

   
        7.  கண்பி சையுஞ்செங் கையை முறுக்குமால்
           பண்பி யன்றவாய்ப் பல்லை நெரிக்குமால்
           மண்பு ரண்ட வுடலை வளைக்குமால்
           எண்பு கைந்தெரி யென்ன யுயிர்க்குமால்.

        8.  கையை நோக்குங் கதிர்வடி வேல்முனை
           வையை நோக்கும் மகனிலை நோக்குன்றன்
           மெய்யை நோக்கும் விரிகடல் வேலிவாழ்
           பொய்யை நோக்கும் புகழையு நோக்குமால்.

        9. கொவ்வை யென்னக் குருவிழி சேப்புறத்
           தெவ்வ ருள்ளந் திடுக்கிடச் செவ்விதழ்
           கவ்வ நாக்கறல் காணக் கடுஞ்சினக்
           குவ்வை வெந்தழல் கொந்தளித் தோங்குமே.

        10. குழந்தை யோவெனுங் கோமக னேயுளங்
           குழைந்தை யோவெனுங் கோளர்கை யம்பினால்
           விழுந்தை யோவெனும் வேறு படைத்துணை
           இழந்தை யோவெனு மென்செய்கு வேனெனும்.

        11. அப்ப வோவெனு மாண்மக னேயெனும்
           ஒப்பி லோயெனு மோவென தாவியே
           இப்ப வோபிற கோவிரைந் தேனென
           எப்ப வோவரு வாயென வேங்குமால்.

        12. மைந்த வோவெனும் வண்டமிழ் மக்களின்
           தந்தை யோவெனுந் தம்முயி ரோவெனும்
           உந்தை யோடென வூனரை யோட்டியே
           முந்தை யோடினை யோவெனு மொய்ம்பினான்.

        13. அன்ன ரோடுநீ யாரியம் புக்கையோ
           பின்ன ரெங்குப் பெயர்ந்து நடந்தையோ
           உன்னை யேய்த்தவ ரோடி யொளித்தரோ
           இன்னுங் கேட்டிலை யோவெனு மேறனான்.


        14. ஆரி யர்பகை யற்றதன் றோவெனும்
           ஆரி யர்மகிழ்ந் தார்த்தன ரோவெனும்
           பூரி யர்முனி வோர்கள் புலங்களி
           கூர வெம்பிக் குதித்தன ரோவெனும்.
-------------------------------------------------------------------------------------------
8. வை - கூர்மை. வாழ்பொய் - நிலையாமை. 9. அறல்காண - நாக்கைக் கடிக்க. குவ்வை - கூட்டம். 14. எம்பி - துள்ளி.