15. அம்ப றைவறி தாகவே நீயுளம் வெம்பி யேபடை வேறுமி லாதவன் தம்பி யேவந் தடுக்கிலா நிற்கையிற் கும்ப லாய்ப்பகை கூடிச் சிரித்ததோ. 16. குன்ற மன்ன குணக்கட லேயுனைக் கொன்ற பாவியைக் கோடரிக் காம்பினை ஒன்று கூடிய வூனரை யேவனைக் கொன்றி தோபழிக் குப்பழி வாங்குவேன். 17. என்னு முன்னு மெழுந்திருக் கும்பிற கின்னு மோவென் றிரைக்கு முறைக்கும்பல் தின்னுஞ் சீறுந் தியங்கு முயங்குங்கால் பின்னும் பின்னும் பெயர்ந்து புலம்புமால். 18. மீளு வேனிதோ வென்றுதப் பாதெனச் சூளு ரைத்துச் சுருக்கெனச் சென்றனை ஆளி லாதொ ரயலவ னம்பினால் மாள வோவுனை வாழ்த்தி யனுப்பினேன். 19. தங்க மேசெந் தமிழ்பயில் வாயொடு பொங்கு நீர்மை பொழியும் புனைமலர்த் திங்கள் மாமுகஞ் சேர்தரு சென்னியைச் செங்க ளத்திடைத் தேடியான் காண்பனோ. 20. நீறு பூத்த நெருப்பன வஞ்சரைக் கூறு பாத்துக் கொடுத்துக் கழுகுண வீறு பூத்தசெவ் வேற்கையை வெம்படைக் காறு போர்த்த களத்திடைக் காண்பனோ. 21. இன்ன கூறி யிராவண னேங்கிட அன்ன காலை யருந்தமிழ் மள்ளர்கள் துன்னி னாரிளந் தோன்றலோ டாயிடை மன்ன னாவென வாரி யெடுத்தனன். 22. ஏந்த மார்பி லிறுகத் தழுவினன் வேந்தர் வேந்தனு மெய்மறந் தையன்மேற் சாய்ந்து தானென்னுந் தன்மை யொழிந்தனன் போந்தி யாவரும் பூசல் மயங்கினர். ------------------------------------------------------------------------------------------- 16. ஏவன் - இராமன். 19. நீர்மை - அருள். மலர் - கண். 20. பாத்து - பகுத்து. வீறு - வெற்றி. காறு - கொழு. 22. ஏந்து அம் மார்பு. ஏந்து - உயர்ந்த. பூசல் மயங்கினர் - மாய்ந்த மகனைச் சூழ்ந்து பேரொலியிட்டழுதனர். | |
|
|