பக்கம் எண் :


இராவண காவியம் 537

   
         6.  கோயில்புக் கிருந்த பின்னர்க் கொலைமலி கொடிய பாவி
            தாயென வன்பின் மிக்க தமிழர்பே ரினத்துக் கந்தோ
            நோயென வந்த அந்த நொடியவன் றன்னை நோக்கிச்
            சேயிழை யவளே தேனுந் தீங்கிலள் போலு மென்றான்.

         7.  என்றவன் வினவக் கேட்ட இரண்டகன் இலங்கை வேந்தைக்
            கொன்றெனை யவனி ருந்த கொலுவினி லிருக்கச் செய்த
            நன்றியைக் கனவி லேனு நான்மறக் குவனோ நன்றி
            கொன்றவர்க் குய்தி யுண்டோ குணப்பெருந் தகைமைக் குன்றே.

         8.  காக்குந ரருகி லில்லாக் காலம்பார்த் திருந்தே யாங்கோர்
            காக்கைவந் தெடுத்துச் சென்றோர் காமரத் தும்பர் வைத்த
            மாக்கனி யதனைக் கொள்ள வலியவில் லண்ணால் அந்தக்
            காக்கையைக் கொன்ற பின்னக் கனியுன்றன் கைய தன்றோ.

         9.  குன்றுறழ் குவவுத் தோளாற் கொடும்பகைக் கடலை முற்றும்
            பொன்றிடக் குறையி லாது பொடிபடக் கலக்கி வென்ற
            வென்றிவிற் கையா வென்னை மேம்படச் செய்த மெய்யா
            மன்றலங் குழலி நன்கு வாழ்குநள் மயங்கல் வேண்டா.

         10. போரிறு வாய்க்க ணந்தப் போதினி லடியேன் நந்தம்
            வீரரைக் கூயன் னாளை வெம்பகை நலியா வண்ணம்
            காரிகை தனைக்கண் போலக் காத்திட வேவி யுள்ளேன்
            ஆரியர் தலைவ வஃதென் அறப்பெருங் கடப்பா டன்றோ.

         11. மட்டவிழ் குழலி யீங்கு வந்தபோ திருந்தே யன்னாள்
            கட்டளை யேற்றுச் செய்யுங் கடக்கருந் தோழி யாக
            விட்டன னெனது செல்வி மெல்லியற் கருங்காப் பாகப்
            பட்டனள் நீழல் போலப் பாடறிந் தொழுகா நின்றாள்.

         12. நின்னுயிர்க் குயிரன் னாட்கு நெடுந்தமி ழிலங்கை வந்த
            பின்னொரு குறையு நேராப் பெற்றி்யிற் பிறங்கா நின்ற
            தன்னுயி ரெனவே காத்து வருகுநள் தரிய லாரின்
            இன்னுயி ருணற்குக் கோடும் எதிரிலா வதிர வில்லி.

         13. அன்னவ டன்னா லேதான் அருந்திற லுடைய வாலி
            தன்னையோ ரம்பாற் கொன்று தம்பிக்கவ் வரசை யீந்த
            நின்னருந் திறலோ டான்ற நீப்பரு முதவி கேட்டுத்
            துன்னினன் புகலா வுன்னைத் தொல்லர சடைவான் வேண்டி.

-----------------------------------------------------------------------------------------
         6. நொடியவன் - பழியினன், பீடணன்.