பக்கம் எண் :


552புலவர் குழந்தை

   
       76. நாரியென் சொல்லைத் தட்டிய தோடு
               நங்கையை யடைந்திட விங்கு
          நேரிய முறையில் வருகென வழைத்த
               நெடியவன் சொல்லையுந் தட்டிப்
          பூரிய ருளவால் இலங்கையை முற்றிப்
               பொழுதுள தனையுமே தீரா
          ஆரியர் தமிழர் மாபெரும் பகைமை
               யதற்குவித் திட்டுமே விட்டீர்.

       77. காதலங் கயிற்றால் ஒன்றுற விறுக்கிக்
               கட்டிய கட்டவிழ்க் குகிலாள்
          ஊதுலைக் குருகீ னுயிர்த்துயிர்ப் படங்கி
               உடனுயிர் நீத்துமேம் பட்ட
          கோதறு வண்டார் குழலியின் மாண்ட
               குணப்பெருஞ் சிறப்பினை யெண்ணிச்
          சீதைவாய் வாளா திருமலர் முத்தம்
               சிந்தவே சிலையெ னநின்றாள்.

       78. பைந்தொடி யுன்ன யெடுத்துவந் ததற்காப்
               பகைகொடு படையெடுத் தில்லேன்
          எந்தையை யன்று வெந்நிடச் செய்தான்
               எம்மினப் பெரியவ ரீங்குச்
          செந்தழல் வேள்வி செயத்தடை செய்தான்
               திருடரென் றவர்தமைப் பழித்தான்
          விந்தகந் தனது நாடென நமரை
               வெருட்டிய தாலவற் கொன்றேன்.

       79. அலைகட லுலக முழுவது மொருங்கே
               ஆரியர்க் குரியதே யாகும்
          இலையதி னி்ன்று தமிழகந் தனியா
               என்பதைப் பேதைநீ யறியாய்
          வலமுற நிவந்த கொடியரை யொறுத்து
               மன்பதைக் கூறுசெய் யாமல்
          நிலவுல கிதனை யென்குல முன்னோர்
               நிரல்பட ஆண்டுமே வந்தார்.
---------------------------------------------------------------------------------------
       76. பொழுது - ஞாயிறு. பொழுதுளதனையும் - ஞாயிறு உள்ள வரையிலும்.