9. மற்றவ ரதனைக் கேட்டு மன்னனே வருந்த வேண்டா சுற்றமு நட்புந் தோன்றாத் துணைவருந் துயரம் போக்கற் குற்றரு நாங்க ளன்றோ வுறுகுறை யுண்டோ வூரைச் சுற்றுவ மின்றே யின்பந் தோய்தரும் படிநா மென்றார். 10. என்றவர் கூறக் கேட்ட விரண்டக னுவகை பூத்து நன்றுநன் றெம்மீ ரின்றே நகரணி கண்டு மீளற் கன்றுபோல் முரச மின்று மறைகென வறைந்தா ரூரார் அன்றுபோ லின்று மானா ரரசனும் வெளிப்பட் டானே. 11. இலங்கைமா நங்கை யந்த விரண்டகன் வரவு காண மலங்கியே விளக்க மென்னும் மலர்விழி பொத்திக் காணும் புலங்கெட விருள தென்னும் புரிகுழல் விரித்தே யில்லந் திலங்கிடு கதவ வாயைத் திறந்திடா தினைந்தா ளம்மா. 12. வென்றெறி முரச மார்ப்ப வெற்றிவேற் கொற்றத் தண்ணல் மன்றலங் குழலி யோடு மணவிழாக் கண்ட நன்னாள் ஒன்றிய நிலையை யெண்ணி யுள்ளுடைந் திலங்கை மானும் இன்றைய நிலையை யொப்பிட் டினைதல்போ லிருந்த வில்லம். 13. கருவிடைப் பூத்து மானங் காய்த்தறப் பழுத்துப் போந்த உருவிடைச் சுவைக்கச் சொட்டு மொழுக்குடைத் தமிழ ரில்ல மொருபுடைக் கதவ மேனு முவந்தில வுவவா ரோடு தெருவிடைப் பிணம்போ லேபூந் தேரிடைச் சென்றா னம்மா. 14. இன்னண மாக மக்க ளியைபிலா தவரை யாளும் மன்னவ னாகிப் பேரூர் வலஞ்செலுங் கொடிய பாவி தன்னையூர் மக்க ளெல்லாந் தனித்தனி வெறுத்து மற்றோன் துன்னிய செயலை யாய்ந்து சொல்லியே பழிக்க லானார். 15. ஆடவர் பழித்த வாற்றை யறிந்தன முனமே மாட கூடநீ ளிலங்கைமூதூர்க் கொடியிடைக் கொவ்வைச் செவ்வா யாடமைப் பசுந்தோ ளைம்பா லயில்விழித் தரள வெண்பல் மோடவிழ்ந் தினிக்குச் செந்தேன் மொழித்தியர் பழித்தல் காண்பாம். --------------------------------------------------------------------------------------- 11. மலங்கல் - மயங்கல். திலங்கல் - விளங்கல். 12 பலகணியிற் பதுங்கிப் பார்த்தனர். 13. மானம் பூத்துக் காய்த்தது. புடை - பக்கம். 15. அமை - மூங்கில், தரளம் - முத்து. மோடு - மிகுதி. | |
|
|