பக்கம் எண் :


564புலவர் குழந்தை

   
                       கலித்துறை
 
          16.  ஊரினை விட்டே யழிபடை யாள ருடனோடி
              ஆரிய னைக்கும் பிட்டழு தன்னா னடிமீது
              வேரற வீழும் மரமென வீழ்ந்த விழலன்னான்
              தேரினில் வந்தான் நன்றிது வென்றார் சிலமாதர்.

          17.  பொங்கொளி யோனுங் கண்டுள நாணும் புகழ்மிக்கான்
              பங்கி லெழுந்துந் தண்டமிழ் கற்றும் பண்புற்றும்
              எங்கையை யந்தோ வன்கொலை யெய்த இழியானைச்
              செங்கை குவித்தான் நன்றிது வென்றார் சிலமாதர்.

          18.  திருவிட மொன்றோ விந்திர மோடு தென்பாலி
              பெருவள நாடு மொருகுடை யாண்ட பெரியோனைச்
              செருவிடை வடவன் றுணைகொடு வீழ்த்த தீயோற்குத்
              திருவிழ வொன்றோ நன்றிது வென்றார் சிலமாதர்.

          19.  பாவலர் பாடும் பைந்தமி ழேடு பயில்கையாற்
              காவல னாகக் கருதியே யொருவர் காணாது
              மாவலர் சோலைப் பாசறை புக்கே வடவோனின்
              சேவடி தொட்டான் நன்றிது வென்றார் சிலமாதர்.

          20.  பூமண நாறா தேபொதி கொள்ளும் புறவாய்போற்
              றாமரை போலத் தமிழக மெங்குந் தகநின்ற
              கோமக னோடு வந்து பிறந்தான் கொடியோனுந்
              தேமலி னின்னான் நன்றிது வென்றார் சிலமாதர்.

          21.  பீடண னென்று பெற்றவ ரிட்ட பெயர்கொன்றே
              மூடண னென்றே யுலகினர் தூற்ற முறைகொன்று
              கேடண வியவிக் கொடியோன் போனீர்க் கிடையெங்குந்
              தேடினு மில்லை நன்றிது வென்றார் சிலமாதர்.

          22.  ஒருகுடை நிழலிற் றமிழக முழுது முயிர்போலப்
              பெருகொளி முத்தின் குலமென வாண்ட பெரியோனின்
              திருவடி காணா வடமக னடிமைச் சிறியோனூர்த்
              தெருவிடை வந்தான் நன்றி்து வென்றார் சிலமாதர்.
---------------------------------------------------------------------------------------
          20. புறவாய் - புறவிதழ். தேமல் - பெண்கள் உடலிற் றோன்றி அழகைக் கெடுக்கும் பசுமை நிறம். 21. நீர்க்கிடை - கடல்சூழ்ந்த உலகம்.