இழிசெயல் புரிவோர் பிறர்பழிக் காளா விறுதியி லீடழிந் திடருற் றழிகுவ ரயோத்தி ராமனே யிதனுக் காகுவன் சான்றெனு முலகே. 47. வாழ்கதாழ் வுயர்வில் லாத்தனித் தமிழர் வழங்குசெந் தமிழ்மொழி வாழ்க வாழ்கசெந் தமிழைத் தாய்மொழி யாக வழங்குசெந் தமிழினம் வாழ்க வாழ்கபல் வளமும் பொருந்தியே தமிழர் வாழ்தமி ழகமது வாழ்க வாழ்கவென் றையுமிக் காவியந் தமிழர் மனத்திடை பொலிந்துவா ழியவே. ஐந்தாவது போர்க்காண்டம் முற்றிற்று. புலவர் குழந்தை செய்த இராவண காவியம் முற்றிற்று. |