43. என்னென வோவெண் ணாத வெண்ணியே யிறுதி யாக அன்னதே தகவா மன்கொ லாங்கதை யினித்தாழ்க் காம லின்னையே செய்கிற் பாமென் றிலக்குவன் றனைகூ யெம்பி அன்னவட் குறித்த விவ்வூ ரலரினைப் பொறுக்க கில்லேன். 44. ஆகையா லவளை யி்ன்னே யரியகான் விடுப்பா யென்ன ஏகெனா முன்ன ரேகு மிழிதகை புலரா முன்னர்த் தோகையைத் தேரி னேற்றித் தொலைபடு கானில் வி்ட்டுக் கூகைவாய் குமைத்தான் போலக் கோநக ரடைந்தா னம்மா. | எழுசீர் விருத்தம் | 45. ஊரலர்க் கஞ்சு மனையற மதனுக் குறுதுணை யாகவே கொண்ட காரிகை தன்னை யஃறிணைப் பொருள்போற் கடக்கருங் கொடியவெங் கானில் ஓரியா யலைந்து திரிகென விடுத்தே ஊரல ரவிந்தது போல ஆரிய மறைநூன் முறைப்படி ராமன் அயோத்தியை யாண்டிருந் தனனே. 46. பழியினைக் குணமென் றுயர்குண மதனைப் பழியெனக் கொண்டுளந் திருகி வழிவரு மக்கட் பண்பெனும் பொருளை மருந்துக்கு மறிகில ராகி --------------------------------------------------------------------------------------- 43. கூய் - அழைத்து. அன்னவள் - சீதை. அலர் - பழிச்சொல். 44. குமைத்தல் - சிதைத்தல், அறுத்தல். ஊரலரை ஒழித்தல் போல எண்ணிச் சீதையைக் காட்டில் விட்டு வந்தானென்பது. 46. அழிகுவர் - வருந்துவர். எனும் உலகு - என்று உலகம் பழிக்கும். | |
|
|