39. அப்படி மனைவி தன்பா லறைந்திட வஞ்சத் தக்க அப்படி நமக்கு நேர்ந்த வழிதக வின்ன வென்று செப்புக வஞ்சல் வேண்டா தேவியென் னுள்ளங் கொள்ள ஒப்பறு வில்லோ யின்னென் றோதுக வெனவே இராமன். 40. ஒழுக்கமில் லவள்நீ யென்றிவ் வூரவ ரொன்றோ செய்வாய்க் கொழுக்கனிச் சாறு பாயுங் கோசல நாட்டோ ரெல்லாம் பழிக்கிறா ரினிமே லென்றன் பாவையே யுயிரை யானும் இழக்கிலே னென்னின் மான மிருக்கிலா தென்செய் கேனே. 41. தோகையோர் நாட்டு மக்கள் தூற்றியே பின்னு மன்னார் சாகிலா ரென்னின் முன்னர்ச் சலிப்பறத் தொகுத்து வைத்த வாகையும் புகழும் மானம் போனபின் வாழு மோதான் ஆகையால் மானே நானெவ் வாறுனைப் பிரிவே னென்றான். 42. பெருகொளி மார்ப வூரார் பிதற்றலுக் கஞ்ச லாமோ திருகுத லொழிக வென்று தேற்றவே சீதை யன்பே வருகிறே னெனவந் தின்று வருத்தமிக் ககன்று சென்றே ஒருமுடி வில்லா னாக வுளந்தடு மாறி யன்னான். | |
|
|