35. ஆதகா விளையோன் செய்யு மாரிய வடிமை யாட்சி தீதென வெறுத்தே யாவி செலவடக் கிருக்கின் றேன்கொல் பாதுகாப் பற்ற யானோர் பழந்தமிழ் மகனென் னாமுன் ஓதகா தென்று வாளை யுருவியே தலைகொய் தானே. 36. ஆரிய ருவந்து வாழ்த்தி யலர்மழை தூவி யார்த்தார் நேரிலான் பிழைத்தே னென்று நெடும்படை யொடுகா னீந்தி ஊரினை யடையப் பிள்ளை யுயிர்த்ததென் றவர்பொய் கூறச் சீரிலா னுவந்தே யாட்சி செய்துகொண் டிருக்கு நாளில். 37. அயலவ னிடத்தி லோராண் டிருந்தவா ரணங்கை யேற்ற தியல்பல வென்றே யூரா ரேசுகின் றார்க ளென்றோர் நயமொழி யொற்றன் கூற ராமனுந் திடுக்கிட் டேங்கி மயலுட னெழுந்து போய்த்தன் மனைவியை யடைந்து கண்ணே. 38. உன்னிடங் கூறற் கான வொன்றுள ததனைக் கூறற் கென்னுட னடுங்கு கின்ற தெரிபடு மிழுதி னுள்ளம் உன்னிடு முன்னே வெந்நிட் டுருகுநின் றதுகா ணென்ன என்னிடஞ் சொல்லற் கஞ்சு மிகலிய தொன்றுண் டோகாண். -------------------------------------------------------------------------------------- 35. வடக்கிருத்தல் - உண்ணாதிருந்து உயிர் விடல். 38. இழுது - வெண்ணெய். இகலிய - மாறுபட்ட. | |
|
|