பக்கம் எண் :


இராவண காவியம் 571

   
       31. மாத்தமி ழொருவன் விந்த
               மலைகடந் தேநீ பாது
          காத்திடு நாட்டிற் போந்து
               கடுந்தவஞ் செய்கின் றானச்
          சூத்திரன் றவஞ்செய் கின்ற
               தொலைவரு தீமை யேயித்
          தீத்தொழி லாளன் பிள்ளை
               செத்ததற் கேது வாகும்.

       32. அன்றியு மவனைக் கொன்றா
               லாவிதீ ரிந்தப் பிள்ளைப்
          பொன்றிய வுயிரைப் பெற்றுப்
               பொலிகுவா னுறுதி யாக
          என்றவர் கூறப் பாவி
               யிமையிலப் பாவி தன்னைக்
          கொன்றியா னுய்வே னென்று
               கூறியே படையோ டேகி.

       33. ஆவலோ டிருக்கும் பாங்கை
               யாரியர் காட்டச் சென்று
          மேவியவ் விடத்தைத் தூய
               விழுத்தமிழ் மகனைக் கண்டு
          யாவனீ தவஞ்செய் கின்றா
               யென்னவப் பெரியோ னைய
          பாவிதன் னினத்தை நீத்த
               பதடிநற் பயனொன் றில்லேன்.

       34. சம்புகன் என்பா ரென்னைத்
               தமிழக முடையேன் பொல்லாத்
          தம்பியி னுளவா லெங்கள்
               தமிழிரா வணனைத் தீயன்
          வம்பனா ரியன யோத்தி
               மன்னனா மிராம னென்பான்
          அம்பினா லுறவி னோடு
               மழித்துமே சென்றா னந்தோ.
-------------------------------------------------------------------------------------
       31. தீத்தொழில் - வேள்வித்தொழில்.