27. புலவொடு சோமத் தாக்கிய கள்ளும் பொறுக்கவே யுண்டுமின் னியலார் குலவிட வுவந்து மாரிய வறநூற் கூறுவேள் விகள்பல செய்தும் நிலம்பெயர்ந் தேகிக் காகுள மாடி நேரிழை யாரொடு கூடி இலகிட வின்ப முற்றுறப் பெற்று மினிதர சிருக்கையி லொருநாள். 28. இறந்ததன் பிள்ளை யோடரண் மனைவா யெய்தியோ ராரிய னெம்மை அறந்தவறா தாண்ட வுண்முனோர் காலத் தையகோ வெம்மவர் தம்மிற் பிறந்தவர் முதிரா தேயிளஞ் சாக்கா டடைந்ததிற் பேதையு மோர்செய் நிறைந்தவண் புகழைக் கெடுத்தனை பாவீ நெறியிலா யெனவிகழ்ந் தழுதான். 29. காவலர் தம்மா லறிந்தது மிராமன் கடுகியாங் கடைந்தவற் றொழுதே தேவரீர் நடந்த திதுவென வெடுத்துச் செப்புமி னெனவவன் சினந்து பாவியுன் னாட்சி தன்னிலென் மகவைப் பறிகொடுத் தேனிதோ விழுந்தென் ஆவியைப் போக்கிக் கொள்கிறே னென்ன வையனே பொறும்பொறு மென்றே. | அறுசீர் விருத்தம் | 30. காவலன் றன்னைப் பார்த்துக் கடிதினம் மேலோர் தம்மைப் பாவிமுன் றருதி யென்னப் பறந்துபோய்ச் சொலவன் னாரும் மேவிடத் தொழுது வேந்தன் விளைந்தமை மொழிந்திப் பிள்ளை சாவினுக் கேது காணேன் றமியனே னென்ன வன்னார். | |
|
|