21. வருந்தலை யெம்பியெவ் வகையிங் காற்றிநீ இருந்தனை யென்றினைந் திரங்கிச் சென்றதும் பொருந்திய நிகழ்வையும் புகலக் கேட்டவர் திருந்திய கருத்துளத் தெளிவு கொண்டனர். 22. கோவிலும் பிறகணுங் குறுகிக் கண்டுவந் தாவன கழறியு மளவ ளாவியும் மூவரு முடிமழித் தால மூழ்கிநற் பாவகம் போலவொப் பனையின் மேயினர். 23. திருமுடி புனைந்தொளி திகழி ருக்கைபோந் தொருகுடை நிழலுல கோம்பு வீரனெப் பரிவொடு நற்குணப் பரதன் வேண்டவே சரியென முனிவர்கள் தகுந்த தாமென்றார். 24. திருநக ரொப்பனை செய்து நம்பியை அருவியம் புனிதநீ ராட்டிப் பட்டுடுத் துருவணி கலனணிந் துயரத் தாணியார் குருமணி யிருக்கையிற் கொடியொ டேற்றினார். | எழுசீர் விருத்தம் | 25. பொன்பொலி முத்த மாலையுங் கமழும் பூந்தொடை மாலையும் புனைந்தே இன்பொடு வாழ்கென் றாரியர் வாழ்த்த வியைந்துபல் லியங்கட லார்ப்பத் தன்பொரு மின்னார் சாமர மிரட்டத் தவளவெண் குடைநிழல் கவிப்ப அன்பொடு பரதன் கொடுக்கவே வாங்கி அணிமுடி புனைந்தனன் வசிட்டனன். 26. திருந்திய மணிமா முடிபுனைந் தரசு செய்கையில் வேண்டுவ யாவும் பொருந்திநீ டூழி வாழ்கென வாழ்த்திப் புகுந்திடு மாரியர் தமக்கு விருந்தொடு மணிபொன் னானிலங் கூறை வெறுப்பவே கொடுத்தரி யணையில் இருந்தனன் மறந்து மேவலிற் றிறம்பா வெம்பிய ருவந்திட வினிதே. ---------------------------------------------------------------------------------------- 22. ஆலம் - நீர். | |
|
|