14. குன்று மாரியக் கொள்கை மறுத்தெதிர் நின்று தாழ்ந்த நிலையினை யெய்தியும் குன்றி யேனுந்தங் கொள்கையை விட்டிடா வென்றி மேதமிழ் வீரரைப் போற்றுவாம். 15. கள்ள ரென்று மறவரென் றெள்ளுறு பள்ள ரென்றும் பறைய ரென்றும்பழித் தெள்ள நொந்து மியல்பிற் றிரிகிலா மள்ள ராந்தமிழ் மக்களைப் போற்றுவாம். 16. ஒருது ளிகடு வுண்ணினும் பால்கெடும் பொருளை யாய்ந்தயற் புன்மையைப் போக்கியே பெருமை வாழ்வு பெறுதற் கவாவியே வருத னித்தமிழ் மக்களைப் போற்றுவாம். |
புலவர் |
17. பலது றைத்தமிழ்ப் பாட்டு முரையுஞ்செய் துலக மின்புற வோதியுந் தாய்மொழிக் கலகி லாததொண் டாற்றிய முத்தமிழ்ப் புலவர் பொன்னடிப் போதை வணங்குவாம். 18. மூப்பி யன்றநம் முன்னவர் வாழ்விய லாப்ப யின்ற வொழுக்க மனைத்தையும் யாப்பி யற்படி நூல்செய் தளித்ததொல் காப்பி யப்பெரி யாரைக் கருதுவாம். 19. கள்ளு கப்பக் கமழ்நறும் பூவினைப் புள்ளு வக்குறல் போலமுப் பாலினை உள்ளு வக்குற வொண்குறள் வாக்குறு வள்ளு வப்பெரி யாரை வழுத்துவாம். |
ஷ வேறு வண்ணம் |
20. இக்கதைக் கடிப்படை யிவைக ளாமென அக்கறை யொடுதமி ழாய்ந்து கண்டுமே தக்கசெந் தமிழ்வளர் தந்தை தாயராம் ஒக்கலைத் தமிழ்வள ருளத்தி ருத்துவாம். --------------------------------------------------------------------------------------------- 14. குன்றும் - இழிந்த. ஷ வேறு வண்ணம் - வேறு ஓசையையுடைய கலி விருத்தம். இனி இவ்வாறு வருவனவும் இன்ன. |