அரசர் - ஷ வேறு எண்ணம் |
21. மலையுங் காடும் வயலுங் கடலுமா முலக நான்கு முறுவளந் தேங்கிய நிலைய மாக நிகழ்த்திய நானிலத் தலைவர் பொற்கழல் தம்மை வழுத்துவாம். |
ஷ வேறு வண்ணம் |
22. படியிடை முத்தமிழ்ப் பாவல ராகவும் கடியுடைத் தமிழகக் காவல ராகவும் வடிவுடை முதுதமிழ் மரபினின் மேவிய முடியுடை மூவர்தம் மொய்கழல் போற்றுவாம். 23. இலங்கையை யடைதர இளையபாழ்ம் பாவியும் அலங்கியே யாரியர்க் கடிமையாய்ப் படையொடு தலங்கியே யெதிர்வரக் கண்டுமத் தமிழ்மனங் கலங்கிடா விறையவன் கழலிணை போற்றுவாம். |
கொச்சகம் |
24. கொண்டோன் களப்படவக் கொலைகார ஆரியருங் கண்டே யிரங்கக் கணவ னுடனவிந்து தண்டாத் தகையதமிழ்த் தாய்மானங் காத்துயர்ந்த வண்டார் குழலி மலர்ச்சிலம்பை வாழ்த்துவமே. |
முப்பால் - கலி விருத்தம் |
25. மெய்வ கைதெரி மேலவர் போலயாம் செய்வ தின்னசெய் யாதன வின்னென உய்வ கைமுழு தோர்ந்து பழந்தமிழ் அய்யர் யாத்த வறத்தினைப் போற்றுவாம். 26. திருவுங் கல்வியுஞ் செய்தொழின் மேன்மையும் மருவு நண்பு மருவலர் தன்மையும் செருவு மாட்சித் திறன்முத லாகிய பொருவி லாநற் பொருளினைப் போற்றுவாம். 27. மனைய றத்தின் வகையமை காதலர் தனைநி கர்த்தவர் தம்மைத் தெரிவுறத் தினைநி கர்த்தள வேனுஞ் செயும்பயன் பனைநி கர்த்தவின் பத்தினைப் போற்றுவாம். ------------------------------------------------------------------------------ 23. அலங்குதல் - தத்தளித்தல்; தலங்குதல் - இழி செயல் புரிதல் |