சிறியன 1. தர்மோத்ர புராணம் (கி.பி. 7) 2. நரசிம்ம புராணம் (கி.பி. 4-5) (இயல் 47-52) 3. தேவி பாகவதம் (கி.பி. 10-11) ( III 28-30) 4. பிரகதர்ம, சௌரபுராணம் (கி.பி. 950-1050) (இயல் : 30) இவையெல்லாம் தத்தம் சமயக் கருத்துக்களை விளக்க இராம காதையைப் பயன்படுத்துகின்றன. மேற்கண்ட புராணங்கள் தவிர வான்மீகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்த சில முழு இராமாயண நூல்களும் வடமொழியில் காணப்படுகின்றன. 1. யோக வசிஷ்ட (அ) வசிஷ்ட இராமாயணம் (கி.பி. 8 (அ) 12) 2. அத்யாத்ம இராமாயணம் (கி.பி. 13 இராமசர்மர்) 3. அற்புத இராமாயணம் (முந்தையதற்குப் பிற்பட்டது) 4. ஆனந்த இராமாயணம் (கி.பி. 15) வால்மீகி பெயரால் வழங்குகிறது. இவையேயன்றி இன்னும் பல்வேறு சிறுசிறு இராமாயண நூல்கள் வடமொழியில் கி. பி 19ஆம் நூற்றாண்டு வரையில் தோன்றியுள்ளன. காளிதாசரின் இரகுவம்சம் முதலான பல இலக்கியங்கள் இராமசரிதையைப் பாடுபொருளாகப் பேசுவதையும் காண்கிறோம். இவற்றுள் பெரும்புகழ் வாய்ந்தன:
1. காளிதாசர் : இரகுவம்சம் (கி. பி. 4) 2. பிரவர்சேனர் : இராவணவகோ (அ) சேதுபந்தா (கி. பி. 550-600) 3. பட்டி : இராவணவதா (கி. பி. 500-650) 4. குமாரதாசர் : ஜானகி ஹரணா (கி. பி. 8) 5. அபிநந்தர் : இராமசரிதை (கி. பி. 9) 6. க்ஷேமேந்திரர் : (a)இராமயண மஞ்சரி (கி. பி. 11). : (b)தசாவதார சரிதை 7. சாகல்ய மல்லர் : உதார ராகவர் (கி. பி. 12) 8. சகர கவி : ஜானகி பரிணயம் (கி. பி. 17) 9. அத்வைத கவி : இராமலிங்காம்ருதம் (கி. பி. 17) 10. மோகனஸ்வாமி : இராம ரகசியம் (அ) இராம சரிதை) (கி. பி. 1608) இராமகாதை நாடக வடிவிலும் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை பல நூல்களாக வெளி வந்துள்ளன. பாசர், பவபூதி, ஜெயதேவர் முதலான நாடகாசிரியர்கள் இதில் அடங்குவர். |