|
ஆயிடை-அப்பொழுது, அம்செஞ் சாயல்
- அழகிய சிவந்தசாயலையுடையாய் அராந்தாணத்துள்-சமண் பள்ளியில், ஓர் விஞ்சையன்
இட்ட விளங்கிழை என்றே-ஒரு விஞ்சையனாலிடப்பட்ட மெல்லியல் என்றே, கல்லென்
பேரூர்ப் பல்லோர் உரையினை-கல்லென்னும் ஒலியினையுடைய நகரின்கண் பல்லோராலுங்
கூறப்படுவாய், ஆங்கவர் உறைவிடம் நீங்கி ஆயிழை-ஆயிழாய் நீ அச்சமண முனிவர்
வாழ்விடத்தை நீங்கி, ஈங்கிவள் தன்னோடு எய்தியது உரை என - இம் மணிமேகலையுடன்
ஈண்டு எய்திய காரணத்தைக் கூறு வாயாக என ;
சிறை-அணை. நிறை-காமத்தை உள்ளேயடக்கி நிறுத்துதல்
; மனத்தை நிறுத்தலுமாம் ; காழ்க்கொளின்-வைரமேறின் ; முதிர்ந்தால் என்றபடி;
1 "நீர் மிகிற் சிறையுமில்லை"
2 "நீர்மிகி னில்லை
சிறை" 3 "சிறையென்ப
தில்லைச் செவ்வே செம்புனல் பெருகு மாயின், நிறை யென்ப தில்லைக் காம
நேர்நின்று சிறக்குமாயின்" 4
"பிறிது மாகுப காமங்காழ்க் கொளினே" என்பன ஈண்டு அறியற்பாலன. தவத்தள்,
சரத்தி, வாய்மையள் என்பவற்றைச் செவ்வியள் என அடக்கிக் கூறினான். ஆகென,
விகாரம், அவ்வியம்-பிறர்க்குரியளாதல் கூடா தென்னும் பொறாமை; கோட்டமுமாம்.
அஞ்செஞ் சாயல், விளி. அராந்தாணம் என்பதற்கு மேல் (3 : 87) உரைத்தமை
காண்க.
28--31. வார்
கழல் வேந்தே வாழ்க நின் கண்ணி - நீண்ட வீரக்கழலை யணிந்த அரசே நின்
கண்ணி வாழ்வதாக, தீநெறிப்படரா நெஞ்சினை ஆகுமதி-தீயவழியிற் செல்லாத
உள்ளமுடையை ஆவாயாக, ஈங்கிவள் தன்னோடு எய்திய காரணம் வீங்குநீர்ஞாலம்
ஆள்வோய் கேட்டருள்-இம் மணிமேகலையுடன் யான் வந்த காரணத்தைக் கடல்சூழ்ந்த
நிலவுலகினையாளும் மன்னவனே கேட்டருள் வாயாக ;
32--40. யாப்புடை
உள்ளத்து எம் அனை இழந்தோன் பார்ப்பன முதுமகன்-என் தாயை இழந்தோனும்
உறுதிபொருந்திய உள்ளத்தை யுடைய பார்ப்பன முதியோனும், படிம உண்டியன்-பட்
டிணிவிட்டுண்ணும் நோன்பினையுடையோனும், மழைவளம் தரூஉம் அழல் ஓம்பாளன்
- மழைவளத்தைத் தரும் முத்தீயோம்பு வோனுமாகிய எந்தை, பழவினைப் பயத்தால்
பிழைமணம் எய்திய எற்கெடுத்து இரங்கி-முன் செய்வினையின் பயனால் மாருத
வேகனிடம் அகப்பட்டுப் பிழைமணம் எய்திய என்னைக் காணாமையால் வருந்தி,
தன் தகவுடைமையின் - தனது தகுதி யுடைமையால், குரங்குசெய் கடல் குமரியம் பெருந்துறைப்
பரந்து செல் மாக்க ளொடு-குரங்கு செய்த குமரிக்கடலின் பெரிய துறைக்கண்
நீராடுதற்கு மிக்குச் செல்லும் மக்களோடே, தேடினன் பெயர்வோன் ;
1
புறம். 51. 2 பழ.190. 3
சூளா. கல்யாண. 155. 4 குறுந்.
17
|