|
என்னைத் தேடிச் செல்பவனாய், கடல் மணடு பெருந்துறைக் காவிரி ஆடிய-இடையே
காவிரி கடலிற் கலக்கும் பெரிய சங்க முகத்துறையில் நீராடுதற்கு, வடமொழி
யாளரொடு வருவோன்- பார்ப்பனரோடு வருபவன் ;
மழைவளந் தரூஉம் அழல் என்க ; 1"மழைக்கரு
வுயிர்க்கு மழற்றிக ழட்டின், மறையோ ராக்கிய வாவுதி நறும்புகை" என்பது காண்க.
மாருத வேகனுக்குத் தான் சிலநாள் உரியளானது பற்றி, "பிழைமண மெய்திய" என்றாள்.
குமரி-கன்னியாகுமரி ; 2;"தொடியோள்
பௌவமும்" என்பதன் உரை நோக்குக. வடமொழியாளர்-பார்ப்பனர் ; பார்ப்பனியை
"வடமொழியாட்டி" (13 : 73) என்று பின்னர்க் கூறுவர்.
40--46. கண்டு ஈங்கு-என்னை இந்நகரத்திற் கண்டு, யாங்ஙனம் வந்தனை என்மகள் என்றே தாங்காக்
கண்ணீர் என்றலை உதிர்த் தாங்கு-என் மகளே ஈண்டு எவ்வாறு வந்தாய் என்று
கூறிப் பெருகிய கண்ணீரை என்மீது சொரிந்து, ஓதல் அந்தணர்க்கு ஒவ்வேன்
ஆயினும்-யான் மறையோதும் அந்தணர்களுடனிருத்தற்குத் தகாதவளாயினும், காதலன்
ஆதலின் கைவிடலீயான் - என்மீது மிருந்த அன்புடையனாதலால் என்னைக் கைவிடானாய்,
இரந்தூண் தலைக்கொண்டு-இரந்துண்டு வாழ்தலை மேற்கொண்டு. இந்நகர் மருங்கில்-இவ்வூரின்
கண், பரந்துபடு மனைதொறும் திரிவோன் - பரந்து தோன்றும் இல்லங்கள் தோறும்
சென்று ஏற்போன் ;
கைவிடலீயான்-கைவிடான் ; "காவலன் மகனோ கைவிடலீயான்"
(19 : 32) என்பர் பின்னும் ; "காட்டியதாதலிற் கைவிடலீயான்" (13 : 85)
என்பது சிலப்பதிகாரம்.
46--52. ஒருநாள்
புனிற்றுஆ பாய்ந்த வயிற்றுப் புண்ணினன்-ஒரு நாள் ஈன்றணிமையையுடைய பசுவொன்று
பாய்ந்தமையால் வயிற்றுலுண்டான புண்ணினையுடையனாய், கணவிரி மாலை கைக் கொண்டென்ன
- அலரிமாலையைக் கையிற்கொண்டாற்போல நிணம்நீடு பெருங்குடர் கையகத்து
ஏந்தி-நிணத்துடன் நீண்ட பெரிய குடரைக் கையில் ஏந்திக்கொண்டு, என்மகள்
இருந்த இட மென்று எண்ணி-பண்டு என்மகள் இருந்த இடமாகும் என்று நினைந்து,
தன் உறு துன்பம் தாங்காது புகுந்து - தனது மிக்க துன்பத்துனைத் தாங்க வியலாமற்
புகுந்து, சமணீர்காள் நும் சரண் என்றோனை - சமணர்களே உம்முடைய அடைக்கலம்
என்று கூறியவனை ; பாய்ந்த புண் : பெயரெச்சம் காரணப் பொருட்டாயது ; ஆறு
சென்ற வியர் என்புழிப்போல. 3;"நிணவரிக்
குறைந்தவதர் தொறுங்,
1
சிலப். 10 : 143-4. 2
சிலப். 8 : 1. 3 அகம்.
31.
|