பக்கம் எண் :

பக்கம் எண் :73

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

இல்லறத்தோர் யாவரும் உண்டபின் உச்சிப்பொழுதிற் பிச்சைக் சூச் செல்வது புத்தமதத் துறவியர் இயல்பாகலின், "கதிர்சுடுமம யத்து" என்றார் ; "வெங்கதி ரமயத்து வியன்பொழி லகவயின், வந்து தோன்றலும்," "வெயில்விளங் கமயத்து விளங்கித் தோன்றிய, சாது சக்கரன் றன்னையானூட்டிய" (10 : 27 - 8 ; 11 : 102 -3) எனப் பின்னர் வருதலுங் காண்க. மருதந் துவரில் தோய்க்கப்பட்டு மஞ்சள் நிறமுள்ளதாகலின் "பொன்னிற் றிகழும பொலம்பூ வாடை" எனப் பட்டது. அன்பும் அருளுமுடைய மொழியா லென்க. கடுப்ப-விரைய. தலை-இடம். ஆடையனாய் நோக்கி நிறைத்துக் குளிர்ப்பித்துத் தந்து ஏற்றிக் காட்டிய மறையோனாகிய தலைவன் சங்கதருமன் ஆவானென்க.

70--3  தான் எமக்கு அருளிய -அவன் எமக்கு அறிவுறுத்த, எங்கோன் இயல்குணன் ஏதமில் குணப்பொருள் - எம்முடைய இறைவன் இயல்பாகவே தோன்றிய குணங்களை யுடையவன் குற்றமற்ற குணங்களின் பொருளாயுள்ளோன், உலக நோன்பின் பலகதி உணர்ந்து தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன் - உலகசீலத்துடன் பல பிறப்புக்களிலும் பிறந்து பிறந்து உணர்ந்து உயிர்கட்கு நல்லறிவு புகட்டிய தனக்கென்று உயிர் வாழாத பிறர்க்கே உரிமைபூண்டொழுகுபவன், இன்பச்செவ்வி மன்பதை எய்த-நிரு வாணமடைதற்குரிய பருவத்தை உயிர்ப்பன்மைகள் அடைய, அருள் அறம் பூண்ட ஒரு பெரும் பூட்கையின் - அருளாகிய அறத்தினைப்பூண்ட ஒப்பற்ற பெரிய மேற்கோளினாலே, அறக்கதிர் ஆழி திறப்பட உருட்டி-அறமாகிய கதிர்களையுடைய ஆழியை உலகத்திற் பலவகையாக உருட்டி, காமற் கடந்த வாமன் பாதம் - மாரனை வென்ற புத்தனது திருவடிகளை, தகை பாராட்டுதல் அல்லது யாவதும் மிகைநா இல்லேன் - பாராட்டித் துதித்தலையன்றி வேறுபொருள் களைப்பற்றிச் சிறிதும் பேசாத நாவினையுடையேன், வேந்தே வாழ்க என-மன்னவ வாழ்வாயாக என்று சுதமதி கூற ;

உலக நோன்பு-இல்வாழ்க்கையிலிருந்து செய்யும் நோன்பு, ஒழுக்கம் ; அதனால் இல்லறத்தார் உலகநோன்பிகள் எனப்படுவர். கதி- பிறப்பு. புத்தன் அருளாலே பகவகைப் பிறப்பும் எடுத்தானெனப் புத்தசாதகக் கதைகள் கூறாநிற்கும்: 1"எறும்புகடை யயன்முதலா வெண்ணிறந்த வென்றுரைக்கப் பிறந்திறந்த யோனிதொறும் பிரியாது சூழ்போகி, எவ்வுடம்பி லெவ்வுயிர்க்கும் யாதொன்றா லிடரெய்தின், அவ்வுடம்பி லுயிர்க்குயிரா யருள்பொழியுந் திருவுள்ளம்" 2;"வானாடும் பரியாயு மரிண மாயும் வன்கேழற் களிறாயு மெண்காற் புண்மான், தானாயும் பணையெருமை யொருத்தலாயுந் தடக்கையிளங் களிறாயுஞ் சடங்க மாயும், மீனாயு முயலாயு மன்ன மாயு மயிலாயும் பிறவாயும் வெல்லுஞ் சிங்க, மானாயுங்கொலை களவு கட்பொய் காமம் வரைந்த


1 வீர. யாப்பு, 11 எடுத்திக்காட்டு. 2 நீல. சமய.