பக்கம் எண் :

பக்கம் எண் :74

Manimegalai-Book Content
5. மணிமேகலாதெய்வம் வந்து தோன்றிய காதை

வர்தா முறைந்தபதி மானா வூரே" என்பன காண்க. புத்தன் தனக் கென வாழாப் பிறர்க்குரியாளன் என்ற கருத்து "பிறர்க்கற முயலும் பெரியோய்," "தன்னுயிர்க் கிரங்கான் பிறவுயி ரோம்பு ; மன்னுயிர் முதல்வன்" (11 ; 45 ;55; 114-7) என இந்நூலுள்ளே பின்ன ரும் வந்துள்ளன ; 1"இருட்பார வினைநீக்கி யெவ்வுயிர்ச்குங் காவ லென, அருட்பாரந் தனிசுமந்த வன்றுமுத லின்றளவும், மதுவொன்று மலரடிக்கீழ் வந்தடைந்தோர் யாவர்க்கும், பொதுவன்றி நினக் குரித்தோ புண்ணியநின் றிருமேனி," "தீதியல் புலியது பசிகெடு வகைநின திருவுரு வருளிய திருமலி பெருமையை," என்பனவும் காண்க. சிறுகுடிகிழான் பண்ணன் என்பானைச் சிறப்பிக்குமிடத்து அகப்பாட்டிலே (54) இத்தொடர் முழுதும் வந்துள்ளது ; அருளறம்- அருளாகிய அறம் ; அருளே எல்லா அறங்களிலும் மேலாயது என்பது 2;"ஒன்றாக நல்லது கொல்லாமை" "அஹிம்ஸா பரமோதர்ம:" என்ப வற்றான் அறியப்படும். கதிர் - திகிரியின் ஆர். அறத்தை ஆழியென்ற தற்கேற்ப ''உருட்டி'' என்றார் ; பலவகையாலும் அவன் அறவுபதேசஞ் செய்தமையின் ''திறம்பட'' என்றார் ; "ஆதி முதல்வ ன்றவாழி யாள் வோன்" (10 : 31 என்பார் பின்னும்; இதுபற்றியே புத்தனைத் தரும சக்கரப் பிரவர்த்தனாசாரியன் என்பர். காமன் - மாரன் ; அறத்திற்கு மாறான விருப்பங்களை மனத்திலுண்டாக்கும் ஒரு தேவன் ; மாபோதி விருக்கத்தின் கீழே நோற்றிருக்கையில் இவன் செய்த இடையூறுகளை யெல்லாம் வென்று விளங்கினமையின் "காமற்கடந்த வாமன்" என்றார். வாமன் - அழகுள்ளவன் ; புத்தன். தகைபாரட்டுதல்-துதித்தல்; ஒரு சொல். மிகை நா - மிகைக்கின்ற நா ; 3"காமனை வென்றோ னாயிரத்தெட்டு, நாம மல்லது நவிலா தென்னா" என்பது அறியற் பாலது.

80--3.  அஞ்சொல் ஆயிழை நின்திறம் அறிந்தேன்-அழகிய மொழியையுடைய ஆயிழாய் நின் வரலாற்றினை அறிந்தேன், வஞ்சிநுண் இடை மணிமேகலைதனை - கொடிபோலும் நுண்ணிய இடையையுடைய மணிமேகலையை. சித்திராபதியால் சேர்தலும் உண் டென்று-சித்திராபதியால் அடைதலுங்கூடும் என்று கூறி, அப் பொழில் ஆங்கவன் அயர்ந்து போயபின் - உதயகுமரன் அப் பொழிலினின்றும் காமத்தால் தளர்ச்சியுடையனாய்ச் சென்ற பின்னர்;

84--63.  பளிக்கறை திறந்து-மணிமேகரை பளிக்கு மண்டபத்தைத் திறந்து, பனிமதி முகத்துக் களிக்கயல் பிறழாக் காட்சியள் ஆகி- குளிர்மதி போலும் முகத்திலே மதர்த்த கயல்போலுங் கண்கள் பிறழாத காட்சியையுடையளாய், கற்புத்தான் இலள் நற்றவ உணர்விலள் வருணக் காப்பு இலள் பொருள் விலையாட்டி என்று-


1 வீ. யாப்பு. 14. எடுத்துக்காட்டு. 2 குறள். 323. 3; சிலப். 10; 196 -7.