கற்பில்லாதவள் நல்ல தவவுணர்ச்சியில்லாதவள் 
 மரபிற்கேற்ற காவலற்றவள் பொருள் கொடுப்பார்க்குத் தன்னை விற்கும் விலை 
 மகள் என்று இவ்வாறாக, இகழ்ந்தனன் ஆகி நயந்தோன் என்னாது-பழித்துரைத்தவனாய் 
 விரும்பினோன் என நினையாமல், புது வோன் பின்றைப் போனது என் நெஞ்சம் - 
 ஏதிலான் பின்னே என்னுடைய உள்ளம் சென்றது; இதுவோ அன்னாய் காமத்து இயற்கை 
 - அன்னையே இங்ஙன முள்ளதோ காமத்தின் இயல்பு, இதுவே ஆயின கெடுக தன்திறம் 
 என-இவ்வாறாயின் இதன்வலி கெடுவதாக என்று, மதுமலர்க் குழலாள் மணிமேகலை தான் 
 சுதமதி தன்னொடு நின்ற எல்லையுள்-தேனவிழும் மலர்களை யணிந்த கூந்தலையுடைய 
 அவள் சுதமதியோடும் கூறிநின்ற பொழுதில் ; 
 சுமதியை நோக்கிய பார்வை விலகாது நின்றாளென்பர் ''களிக் கயல் பிறழாக் 
 காட்சியளாகி'' என்றார். வருணக் காப்பு - வருண மாகிய காவல் என்றுமாம். மணிமேகலை 
 திறந்து காட்சியளாகிக் கெடுக தன்றிறமென நின்ற வெல்லையுள் என்க. 
 
94--7.  இந்திர 
 கோடணை விழாஅணி விரும்பி வந்துகாண்குறூஉம் மணிமேகலாதெய்வம் - இந்திரகோடணையாகிய 
 விழாவின் எழிலைக் காணுதற்கு விரும்பி வந்த மணிமேகலா தெய்வம், பதியகத்து 
 உறையும் ஓர் பைந்தொடியாகி அப்பதியின்கணிருக்கிற ஒரு பெண் வடிவத்துடன், மணியறைப் 
 பீடிகை வலங்கொண்டு ஓங்கி - பளிக்கறையிலுள்ள பீடிகையை வலம்வந்து விசும்பில் 
 உயர்ந்து;  
 
 கோடணை - முழக்கம்; பலவகை ஆரவாரங்களை யுடைமையின், இந்திர விழா-இந்திர 
 கோடணை யெனப்பட்டது. "இந்திர கோடணை யிந்நகர்க் காண," "இந்திர கோடணை 
 விழவணி வருநாள்" (7. 17, 17; 59) எனப் பின் வருதல் காண்க. மணி-பளிங்கு, 
 ங்கு, 
 
 
98--108. புலவன்-மெய்யறி 
 வுடையோனே, தீர்த்தன்-தூயோனே, புண்ணியன் - அறவோனே, புராணன் - பழையோனே, 
 உலக நோன்பின் உயர்ந்தோய்-உலக நோன்பினால் மேம்பட்டவனே, என்கோ - 
 என்பேனோ, குற்றம் கெடுத்தோய் - முக்குற்றங்களையும் அழித்தோய், 
 செற்றம் செறுத்தோய் - கடுஞ்சினத்தைக் கடிந்தோய், முற்ற உணர்ந்த முதல்வா-முழுதும் 
 உணர்ந்த முதன்மையுடையோய், என்கோ-என்பேனோ, காமற் கடந்தோய் - மாரனை 
 வென்றோய், ஏமம் ஆயோய்-இன்ப மயமாய் உள்ளோய், தீ நெறிக் கடும்பகை கடிந்தோய்-தீய 
 நெறியாகிய கடிய பகையை நீக்கினோய், என்கோ-என்பேனோ, ஆயிரஆரத்து ஆழியன் 
 திருந்தடி- ஆயிரம் ஆரங்களைக் கொண்ட அறவாழியினையுடைய  
 
 நின்செவ்விய திருவடிகளை, நாஆயிரம் இலேன் ஏத்துவது எவன் என்று - ஆயிரம் நாவில்லா 
 யான் எவ்வாறு துதிக்க வியலும் என்று, எரி மணிப் பூங்கொடி இருநில மருங்குவந்து-சுடர் 
 விடுகின்ற மாணிக்   |