கப் பூங்கொடியானது பெரிய பூமியின் பக்கலில் வந்து, ஒரு தனி திரிவது ஒத்து-தன்னந்தனியே
திரிவதுபோல, ஒதியின் ஒதுங்கி- மெய்ஞ்ஞானத்துடன் ஒதுங்கி, நிலவரை இறந்து
ஓர் முடங்குநா நீட்டும்-நிலவெல்லையைக் கடந்து தனது வளைந்த நாவை நீட்டுகின்றாள்;
குற்றம்-காம வெகுளி மயக்கங்கள். ஏமம் - பாதுகாவலுமாம். ''ஆழியந் திருந்தடி''
என்ற பாடத்திற்கு ஆயிரம் ஆரங்களையுடைய சக்கர ரேகை பொருந்திய திருந்திய
அடி என்றுரைக்க. நாவாயிர மிலேன் ஏத்துவ தெவன் என்றது என் ஒரு நாவில் அடங்குவதன்று
என்றபடி. ஓதி - முக்கால உணர்வு. நிலவரை இறந்து - புவியின் மேலே உயர்ந்து.
ஓர்: அசை. நாநீட்டும் - சொல்லும்.
109--118. புல
வரை இறந்த புகார் எனும் பூங்கொடி - அறிவின் எல்லையைக் கடந்த புகார் என்னும
பூங்கொடி, பன்மலர் சிறந்த நல்நீர் அகழிப் புள் ஒலி சிறந்த தெள் அரிச்
சிலம்பு அடி - பல மலர்களும் சிறந்து விளங்குகின்ற நல்ல நீரினையுடைய புட்களின்
ஒலி மிக்க அகழியாகிய சிறந்த தெள்ளிய அரியினையுடைய சிலம் பணிந்த அடியையும்,
ஞாயில் இஞ்சி நகை மணிமேகலை - ஞாயிலையுடைய மதிலாகிய ஒள்ளிய மணிகளாலாய
மேகலையையும், வாயில் மருங்கு இயன்ற வான் பணைத்தோளி - வாயிலின் பக்கலில்
அமைந்த பெரிய தோரண கம்பமாகிய தோளையும் உடையாள், தருநிலை வச்சிரம்
என இரு கோட்டம் எதிர் எதிர் ஓங்கியகதிர் கோல் இளவனமுலை-எதிரெதிர்
உயர்ந்த கற்பகத் தரு நிற்கும் கோயில் வச்சிரப்படை நிற்கும் கோயில்
என்னுமிரண்டுமாகிய ஒளி பொருந்திய இளைய அழகிய கொங்கைகளையும், ஆர் புனை
வேந்தற்குப் பேரளவு! இயற்றி - ஆத்திமாலை சூடும் சோழனுக்குப் பெரிய அளவினதாக
இயற்றப்பட்டு; ஊழி எண்ணி நீடு நின்று ஓங்கிய - எண்ணப்படும் பல ஊழிக்காலமாக
நிலைபெற்றுயர்ந்த, ஒரு பெரும் கோயில் திருமுக வாட்டி-ஒப்பற்ற கோயிலாகிய
திருமுகத்தினையும் உடையாள்:
புல வரை - அறிவின் எல்லை; 1"புலவரை
யிறந்த புகழ்சால் தோன்றல்" 2"புலவரை
யிறந்தோய் போகுதல் பொறேஎன்" என் பன காண்க. மலர் சிலம்பும், புள்ளொளி
சிலம்பொலியும், அகழி அடி யுமாம். ஞாயில் - மதிலின் ஓருறுப்பு; ஏப்புழைக்கு
நடுவாய் எய்துமறையுஞ் சூட் டென்பர் நச்சினார்க்கினியர்; குருவித்
தலையென்பர் அடியார்க்கு நல்லார். பணை - மூங்கில்; ஈண்டுத் தோரண
கம்பம. எதி ரெதிரோங்கிய இருகோட்டமென்க. வச்சிரலை என விரித்துக் கொள்க.
வேந்தற்கேற்பப் பெரிய அளவினதாக இயற்றப்பட்ட கோயில்; 3;"பெரும்பெயர்
மன்னர்க் கொப்ப மனை வகுத்து" என்ப
1
புறம். 21. 2 சிலப், 28:
184. 3 நெடுநல். 71.
|