|
துங் காண்க-சிலம்பு, மேகலை என்பவற்றிற்கேற்ப
அடைகள் புணர்த்தி யுள்ளார்.
119--122. குணதிசை
மருங்கில் நாள் முதிர் மதியமும்-கீழ்த்திசையில் நான் நிரம்பிய முழு மதியமும்,
குடதிசை மருங்கில் சென்று வீழ் கதிரும்-மேற்றிசையில் சென்று படிகின்ற ஞாயிறும்,
வெள்ளி வெண் தோட்டொடு பொன் தோடாக-வெள்ளியாலாகிய வெண் தோட்டுடன்
பொன்னாலாய தோடுமாக, எள்ளறு திருமுகம் பொலிப் பெய்தலும்-இதழ்தலற்ற அழகிய
முகம் பொலியுமாறு அணிதலும்;
நாள்-கலை. நிறையுவா நாளில் மித கீழ்த்திசைக்கண்
உதித்தும், பரிதி மேற்றிசையிற் படிந்தும் கோயிலின் இரு மருங்கும் ஒருங்கு
தோன்றுதலின், அவற்றைப் புகார்ச் செல்வி கோயிலாகிய முகத்தின் இரு மருங்கும்
தோடாக அணிந்தனள்; என்றாள்; எனவே அந்திப் பொழுது வந்தமை பெற்றாம்;
இது பரியாயவணி. திருமுகவாட்டி பெய்தலும் என்க.
123--41. அன்னச் சேவல் அயர்ந்து விளையாடிய தன்னுறுபெடையைத் தாமரை அடக்க - அன்னச சேவலானது
மெய்ம்மறந்து விளையாடிய தனது பேடையைத் தாமரை மலர் குவிந்து தன்னுள் அடக்கிக்
கொள்ள பூம்பொதி சிதையக் கிழித்துப் பெடை கொண்டு ஓங்கு இருந் தெங்கின்
உயர் மடல் ஏற-பூலினது கட்டு அழியுமாறு கிழித்துப் பேட்டினைக் கொண்டு உயர்ந்த
பெரிய தென்னையினது வளர்ந்த மடலிற் சேரவும், அன்றில் பேடைஅரிக் குரல்
அழைஇச் சென்று வீழ்பொழுது சேவற்கு இசைப்ப-அன்றிலின் பேடு மெல்லிய குரலால்
சேவலை அழைத்து ஞாயிறுசென்று மறையும் அந்திப் பொழுதை உரைக்கவும், பவளச்
செங்கால் பறவைக் கானத்துக் குவளை மேய்ந்த குடக்கட் சேதா-பவளம்போற்
சிவந்த கால்களையுடைய அன்னப்புட்கள் நிறைந்த கானத்தில் குவளை மலரை மேய்ந்த
திரண்ட கண்களையுடைய செவ்விய பசுக்கள், முலைபொழி தீம்பால் எழு துகள் அவிப்ப
- மடியிலிருந்து பொழிகின்ற இனிய பால் நிலத்தினின்றும் எழுகின்ற புழுதியை
அவிப்ப, கன்று நினை குரல மன்று வழிப் படா-கன்றுகளை நினைந்த குரலை யுடையனவாய்
மன்றுகளின் வழியே செல்லவும், அந்தி அந்தணர் செந்தீப் பேண - அந்தணர்கள்
அந்திச் செந் தீயை வளர்க்கவும், பைந்தொடி மகளிர் பலர் விளக்கு எடுப்ப
- பசிய வளையலணிந்த மகளிர் பலர் விளக்குகளை ஏற்றவும், யாழோர் மருதத்து
இன்னரம் புளர - யாழினையுடைய பாணர் யாழின் நரம்பினை வருடி இனிய மருதப்
பண்ணை யெழுப்பவும், கோவலர் முல்லை குழல் மேற்கொள்ள - கோவலர் முல்லைப்பண்ணை
வேய்ங் குழலினிடமாக இசைப்பவும், அமரக
|