மருங்கில் கணவனை இழந்து-போர்க்களத்தில்
கணவனை இழந்து, தமர் அகம் புகூஉம் ஒரு மகள் போல-தம்மவரிடம் செல்லும் ஒரு
மங்கையைப்போல, கதிர் ஆற்றுப்படுத்த முதிராத் துன்பமோடு - ஞாயிற்றினைப்
போக்கிய முடிவில்லாத துன்பத்துடன், அந்தி என்னும் பசலை மெய்யாட்டி - அந்திப்பொழுது
என்கின்ற பசலை போர்த்த மேனியை யுடையாள், வந்து இறுத்தனளால் மாநகர்
மருங்கு என் - பெரிய நகரத்தின் மருங்கே வந்து தங்கினள் என்க.
அயர்ந்து - விரும்பி என்றுமாம். அடக்க - அடக்கலால். இரவிற் சிறிதும்
பிரிந்திருத்தலருமையின் ''சேவற் கிசைப்ப'' என்றார். கானம் - ஈண்டு நீர்நிலை. சேதா - செவ்விப் பசு ; செந்நிறமுடைய பசுவுமாம். கன்றினை நினைந்தமையாற்
பால் பொழிவனவாயின. மன்று-ஆனினங்களை அடைத்து வைக்கும் வேலி நடுவணதாய
வெளியிடம் ; கொட்டிலுமாம். பகலில் மேயச்சென்ற ஆனினங்கள் மாலைப்பொழுதில்
கன்றை நினைந்து அழைக்குங் குரலோடு போந்து மன்றிலே புகுதல் இயல்பு ; 1''''ஆன்கணம்,
கன்று பயிர்குரல மன்றுநிறை புகுதர,'''' 2
"மதவு நடை நல்லான், வீங்குமாண் செருத்த றீம்பால் பிலிற்றக், கன்று பயிர்
குரல மன்றுநிறை புகுதரு, மாலையும்'''' என்பனவுங் காண்க. எடுத்தல் - கொளுத்தல்,
''யாழோர்...புளர'' - ஈண்டு மருதத்திற்குரிய இயைபு புலப்பட்டிலது ; இவ்வடி இடைப்புகுத்துப்
போலும். ''முல்லைக் குழல்'' என்ற பாடத்திற்கு முல்லையைக் குழலுக்கு அடையாக்குக
; என்னை? 3 "முல்லைக்
கொடியால் முப்புரியாகத் தெற்றிய வளையை வளைவாய்க் கட்செறித்தூதலின் முல்லைக்
குழலாயிற்று" என அடியார்க்கு நல்லார் உரைத்தலின் என்க. தமர்-தந்தை,
தமையன் முதலியோர். முதிர்தல் ஈண்டு முடிதல் ; மேல் முதிதற்கு இடனில்லாத
என்றுமாம். கணவனைப் பிரிந்தாட்கு மெய் பசக்குமாகலின் ''பசலை மெய்யாட்டி''
என்றார் ; ஈண்டுப் பசலையாவது அந்திப் பொழுதின் புற்கென்ற நிறம். திருமுக
வாட்டி தோடாகப் பெய்தலும் பசலை மெய்யாட்டி மாநகர் மருங்கு வந்திறுத்தனள்
என்க.
பூங்கொடி உருவம் பெயர்ப்ப, சூழ்வோன் சுதமதி முக நோக்கி உரையென, உரைப்ப,
அகல்வோன் எய்தியது உரையென, அவள் சங்கதருமன் அருளிய வாமன் பாதத்தைப்பாராட்டுதலல்லது
மிகைநா இல்லேன் என, அவன் போயபின், மணிமேகலை சுதமதியோடு நின்ற வெல்லையுள்,
மணிமேகலா தெய்வம் பைந்தொடியாகிப் பீடிகையை வலங்கொண்டு ஓங்கி ஒதுங்கி
நாநீட்டும் ; நீட்டுழி, திருமுகவாட்டி பெய்தலும், பசலை மெய்யாட்டி முதிராத்
துன்பமொடு மாநகர் மருங்கு வந்திறுத்தனள் என்று முடிக்க.
மணிமேகலா
தெய்வம் வந்து தோன்றிய காதை முற்றிற்று.
1
குறிஞ்சிப். 217-8. 2 அகம்.
14. 3 சிலப். 17 : கொல்லை
|