| 
  என்று நிகழ்ந்தவற்றைச் சொல்ல, அத்தேவரனைவரும் சம்பாபதிகூறிய வாறே கூறினர் 
 ; அதனைக் கேட்டு உண்மை யறிந்து ஒருவாறு வருத்த மொழிந்த கோதமை மகனைப் புறங்காட்டிலிட்டு 
 இறந்து போயினள். 
  பின்பு அறிகின்பு சம்பாபதியின் ஆற்றலை யாவர்க்கும் 
 புலப்படுத்தல்வேண்டி, எல்லாத் தேவர்களும் கூடியவிடத்து அவர்கள் கூடியதற்குறியாக, 
 உலகின் நடுவேயுள்ள மேருமலையும், அதனைச்சூழ்ந்த எழுவகைக் குன்றங்களும் நான்கு 
 பெருந்தீவுகளும், இரண்டாயிரம் சிறு தீவுகளும், ஏனைய இட வகைகளும் ஆகிய இவற்றைப் 
 புலப்படுத்தி, ஆங்காங்கு வாழும் உயிர்களையும் மண்ணீட்டினால் வகுத்து மயனால் 
 நிருமிக்கப்பட்ட தாகலின் சக்கரவாளக் கோட்டமெனப் பெயர்பெற்றது; இது சுடுகாட்டைச் 
 சூழ்ந்த மதிற்புறத்துள்ளதாகலின் ''சுடுகாட்டுக்கோட்ட''மென்று யாவரானும் கூறப்படும்; 
 இதன் வரலாறு இதுவாகும்" என்றுரைக்கக் கேட்டுக்கொண்டிருந்த மணிமேகலை ''மக்கள் 
 வாழ்க்கை இத்தகையது,'' என இரங்கிக்கூறி யிருக்கையில், சுதமதி தூங்குதலுற்றனள். 
 அப்பொழுது மணிமேகலா தெய்வம் மணிமேகலையைத் தழுவி யெடுத்து, ஆகாயவழியே முப்பது 
 யோசனை தெற்கே சென்று, கடல்சூழ்ந்த மணி பல்லவம் என்னும் தீவில் அவளை வைத்தகன்றது. 
 (இதில் புகார நகரின் புறங்காட்டினியல்புகளும், அக்காலத்தில் இறந்தோரை அடக்கஞ் 
 செய்யுமுறைகளும் கூறியிருப்பன சிறப்பாக அறியத் தக்கவை.)] 
    |