பக்கம் எண் :

பக்கம் எண் :81

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
 





20





25





30





35





40





45





50

அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல்
தணியா நோக்கந் தவிர்ந்தில னாகி
அறத்தோர் வனமென் றகன்றன னாயினும்
புறத்தோர் வீதியிற் பொருந்துத லொழியான்

பெருந்தெரு வொழித்திப் பெருவனஞ் சூழ்ந்த
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி
மிக்க மாதவர் விரும்பின ருறையும்
சக்கர வாளக் கோட்டம் புக்கால்
கங்குல் கழியினுங் கடுநவை யெய்தாது

அங்குநீர் போமென் றருந்தெய்வ முரைப்ப
வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும்
அஞ்செஞ் சாயல் நீயு மல்லது
நெடுநகர் மருங்கின் உள்ளோ ரெல்லாஞ்
சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார்

சக்கர வாளக் கோட்ட மஃதென
மிக்கோய் கூறிய உரைப்பொரு ளறியேன்
ஈங்கிதன் காரண மென்னை யோவென
ஆங்கதன் காரணம் அறியக் கூறுவன்
மாதவி மகளொடு வல்லிருள் வரினும்

நீகே ளென்றே நேரிழை கூறுமிந்
நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய
ஈமப் புறங்கா டீங்கித னயலது
ஊரா நற்றேர் ஓவியப் படுத்துத்
தேவர் புகுதரூஉஞ் செழுங்கொடி வாயிலும்

நெல்லுங் கரும்பு நீருஞ் சோலையும்
நல்வழி யெழுதிய நலங்கிளர் வாயிலும்
வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்
துள்ளுரு வெழுதா வெள்ளிடை வாயிலும்
மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கின்

தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து
நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும்
நாற்பெரு வாயிலும் பாற்பட் டோங்கிய
காப்புடை யிஞ்சிக் கடிவழங் காரிடை
உலையா உள்ளமோ டுயிர்க்கடன் இறுத்தோர்