முகப்பு
பக்கம் எண் :
தொடக்கம்
பக்கம் எண் :83
Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
85
90
95
100
105
110
115
புள்ளிறை கூறும் வெள்ளின் மன்றமும்
சுடலை நோன்பிகள் ஒடியா வுள்ளமொடு
மடைதீ யுறுக்கும் வன்னி மன்றமும்
விரத யாக்கைய ருடைதலை தொகுத்தாங்
கிருந்தொடர்ப் படுக்கும் இரத்தி மன்றமும்
பிணந்தின் மாக்கள் நிணம்படு குழிசியில்
விருந்தாட் டயரும் வெள்ளிடை மன்றமும்
அழற்பெய் குழிசியும் புழற்பெய் மண்டையும்
வெள்ளிற் பாடையும் உள்ளீட் டறுவையும்
பரிந்த மாலையும் உடைந்த கும்பமும்
நெல்லும் பொரியுஞ் சில்பலி யரிசியும்
யாங்கணும் பரந்த ஓங்கிரும் பறந்தலை
தவத்துறை மாக்கள் மிகப்பெருஞ் செல்வர்
ஈற்றிளம் பெண்டி ராற்றாப் பாலகர்
முதியோ ரென்னான் இளையோ ரென்னான்
கொடுந்தோழி லாளன் கொன்றனன் குவிப்பவிவ்
அழல்வாய்ச் சுடலை தின்னக் கண்டும்
கழிபெருஞ் செல்வக் கள்ளாட் டயர்ந்து
மிக்க நல்லறம் விரும்பாது வாழும்
மக்களிற் சிறந்த மடவோ ருண்டோ
ஆங்கது தன்னையோ ரருங்கடி நகரெனச்
சார்ங்கல னென்போன் தனிவழிச் சென்றோன்
என்புந் தடியு முதிரமு மியாக்கையென்
றன்புறு மாக்கட் கறியச் சாற்றி
வழுவொடு கிடந்த புழுவூன் பிண்டத்து
அலத்தகம் ஊட்டிய அடிநரி வாய்க்கொண்
டுலப்பி லின்பமோ டுளைக்கு மோதையும்
கலைப்புற அல்குல் கழுகுகுடைந் துண்டு
நிலைத்தலை நெடுவிளி யெடுக்கு மோதையும்
கடகஞ் செறிந்த கையைத் தீநாய்
உடையக் கவ்வி யொடுங்கா வோதையும்
சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை
காய்ந்தபசி யெருவை கவர்ந்தூ ணோதையும்
பண்புகொள் யாக்கையின் வெண்பலி யரங்கத்து
முன் பக்கம்
மேல்
அடுத்த பக்கம்