பக்கம் எண் :

பக்கம் எண் :84

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை



120





125





130





135





140





145





150

மண்கணை முழவ மாக ஆங்கோர்
கருந்தலை வாங்கிக் கையகத் தேந்தி

இரும்பே ருவகையின் எழுந்தோர் பேய்மகள்
புயலோ குழலோ கயலோ கண்ணோ
குமிழோ மூக்கோ இதழோ கவிரோ
பல்லோ முத்தோ வென்னா திரங்காது
கண்டொட் டுண்டு கவையடி பெயர்த்துத்

தண்டாக் களிப்பி னாடுங் கூத்துக்
கண்டனன் வெரீஇக் கடுநவை யெய்தி
விண்டோர் திசையின் விளித்தனன் பெயர்ந்தீங்
கெம்மனை காணாய் ஈமச் சுடலையின்
வெம்முது பேய்க்கென் உயிர்கொடுத் தேனெனத்

தம்மனை தன்முன் வீழ்ந்துமெய் வைத்தலும்
பார்ப்பான் றன்னொடு கண்ணிழந் திருந்தவித்
தீத்தொழி லாட்டியென் சிறுவன் றன்னை
யாருமில் தமியே னென்பது நோக்காது
ஆருயி ருண்ட தணங்கோ பேயோ

துறையு மன்றமுந் தொல்வலி மானும்
உறையுளுங் கோட்டமுங் காப்பாய் காவாய்
தகவிலை கொல்லோ சம்பா பதியென
மகன்மெய் யாக்கையை மார்புறத் தழீஇ
ஈமப் புறங்காட் டெயிற்புற வாயிலில்

கோதமை யென்பாள் கொடுந்துயர் சாற்றக்
கடிவழங்கு வாயிலிற் கடுந்துய ரெய்தி
இடையிருள் யாமத் தென்னையீங் கழைத்தனை
என்னுற் றனையோ எனக்குரை யென்றே
பொன்னிற் பொலிந்த நிறத்தாள் தோன்ற

ஆருமி லாட்டியென் அறியாப் பாலகன்
ஈமப் புறங்காட் டெய்தினோன் றன்னை
அணங்கோ பேயோ ஆருயி ருண்டது
உறங்குவான் போலக் கிடந்தனன் காணென
அணங்கும் பேயும் ஆருயி ருண்ணா

பிணங்குநூன் மார்பன் பேதுகந் தாக
ஊழ்வினை வந்திவன் உயிருண்டு கழிந்தது