|
155
160
165
170
175
180
185
|
மாபெருந் துன்பநீ ஒழிவா யென்றலும்
என்னுயிர் கொண்டிவன் உயிர்தந் தருளிலென்
கண்ணில் கணவனை இவன்காத் தோம்பிடும்
இவனுயிர் தந்தென் உயிர்வாங் கென்றலும்
முதுமூ தாட்டி இரங்கினள் மொழிவோள்
ஐய முண்டோ ஆருயிர் போனால்
செய்வினை மருங்கிற் சென்றுபிறப் பெய்துதல்
ஆங்கது கொணர்ந்துநின் ஆரிடர் நீக்குதல்
ஈங்கெனக் காவதொன் றன்றுநீ யிரங்கல்
கொலையற மாமெனுங் கொடுத்தொழின் மாக்கள்
அவலப் படிற்றுரை யாங்கது மடவாய்
உலக மன்னவர்க் குயிர்க்குயி ரீவோர்
இலரோ இந்த ஈமப் புறங்காட்
டரசர்க் கமைந்தன ஆயிரங் கோட்டம்
நிரயக் கொடுமொழி நீயொழி யென்றலும்
தேவர் தருவர் வரமென் றொருமுறை
நான்மறை யந்தணர் நன்னூ லுரைக்கும்
மாபெருந் தெய்வ நீயரு ளாவிடின்
யானோ காவேன் என்னுயி ரீங்கென
ஊழி முதல்வன் உயிர்தரி னல்லது
ஆழித் தாழி யகவரைத் திரிவோர்
தாந்தரின் யானுந் தருகுவன் மடவாய்
ஈங்கெ னாற்றலுங் காண்பா யென்றே
நால்வகை மரபி னரூபப் பிரமரும்
நானால் வகையி னுரூபப் பிரமரும்
இருவகைச் சுடரும் இருமூ வகையிற்
பெருவனப் பெய்திய தெய்வத கணங்களும்
பல்வகை யசுரரும் படுதுய ருறூஉம்
எண்வகை நரகரும் இருவிசும் பியங்கும்
பன்மீ னீட்டமும் நாளுங் கோளும்
தன்னகத் தடக்கிய சக்கர வாளத்து
வரந்தரற் குரியோர் தமைமுன் நிறுத்தி
அரந்தை கெடுமிவ ளருந்துய ரிதுவெனச்
சம்பா பதிதான் உரைத்தஅம் முறையே
|