பக்கம் எண் :

பக்கம் எண் :86

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை
 




190





195





200





205





210

எங்குவாழ் தேவரும் உரைப்பக் கேட்டே
கோதமை யுற்ற கொடுந்துயர் நீங்கி
ஈமச் சுடலையின் மகனையிட் டிறந்தபின்
சம்பா பதிதன் ஆற்றல் தோன்ற

எங்குவாழ் தேவருங் கூடிய இடந்தனில்
சூழ்கடல் வளைஇய ஆழியங் குன்றத்து
நடுவு நின்ற மேருக் குன்றமும்
புடையி னின்ற எழுவகைக் குன்றமும்
நால்வகை மரபின் மாபெருந் தீவும்

ஓரீ ராயிரஞ் சிற்றுடைத் தீவும்
பிறவும் ஆங்கதன் இடவகை யுரியன
பெறுமுறை மரபின் அறிவுவரக் காட்டி
ஆங்குவா ழுயிர்களும் அவ்வுயி ரிடங்களும்
பாங்குற மண்ணீட்டிற் பண்புற வகுத்து

மிக்க மயனால் இழைக்கப் பட்ட
சக்கர வாளக் கோட்டமீங் கிதுகாண்
இடுபிணக் கோட்டத் தெயிற்புற மாதலின்
சுடுகாட்டுக் கோட்ட மென்றல துரையார்
இதன்வர விதுவென் றிருந்தெய்வ முரைக்க

மதனின் நெஞ்சமொடு வான்றுய ரெய்திப்
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோ ளுரைப்ப
இறந்திருள் கூர்ந்த இடையிருள் யாமத்துத்
தூங்குதுயி லெய்திய சுதமதி யொழியப்
பூங்கொடி தன்னைப் பொருந்தித் தழீஇ

அந்தரம் ஆறா ஆறைந் தியோசனைத்
தென்றிசை மருங்கிற் சென்றுதிரை யுடுத்த
மணிபல் லவத்திடை மணிமே கலாதெய்வம்
அணியிழை தன்னைவைத் தகன்றது தானென்.

1--8.அந்திமாலை நீங்கிய பின்னர் - அந்திப்பொழுதாகிய மாலைக் காலம் கழிந்த பின்னர், வந்து தோன்றிய மலர் கதிர் மண்டிலம்- வந்து உதித்த பரந்த கிரணங்களையுடைய திங்கள் மண்டிலம், சான்றோர் தங்கண் எய்திய குற்றம் - உயர்குடித் தோன்றிய மேன்மக்கள்பாலடைந்த குற்றமானது, தோன்றுவழி விளங்கும்