|
தோற்றம்போல - தோன்றுமிடத்து விளங்குமியல்பினைப்போல, மாசு அறு விசும்பில்
மறுநிறம் கிளர - விசும்பின்கண் மாசற்ற நிறத்தினிடம் களங்கம் விளங்க,
ஆசு அற விளங்கிய அம்தீம் தண் கதிர்-குற்றமற்று விளங்குகின்ற அழகிய தீவிய
குளிர்ந்த கதிரினை, வெள்ளி வெண்குடத்துப் பால் சொரிவதுபோல் - வெள்ளிக்
குடத்தினின்று பாலைச் செரிவதுபோல, கள்அவிழ் பூம்பொழில் இடையிடை சொரிய
- தேன் அவிழுகின்ற மலர்ச்சோலையில் இடையிடையே பொழிய;
அந்திமாலை-அந்தியாகிய மாலை. தோன்றுவழி
விளங்கும் என்றது சான்றோர்பால் குற்றம் உண்டாய அப்பொழுதே அது யாவரும் அறிய
வெளிப்படும் என்றவாறாம்; அவர் வெளிப்படுமிடத்து அதுவும் வெளிப்படும் என்றுமாம:
திங்கள் தூய்மை உடையதாகலானும் அதன்கண் களங்கம் அதற்கு மாறாக இருத்தலானும்
அது விளங்கித் தோன்றிற்று. 1"குடிப்பிறந்தார்
கண்விளங்குங் குற்றம் விசும்பின், மதிக்கண் மறுப்போ லுயர்ந்து" என்பதனாற்
சான்றோரிடைக் குற்றம் யாவருமறிய நிற்றல் காண்க. ஈண்டுப் பொருள் உவமமாக்கப்பட்டது;
என்னை? 2பொருளே யுவமஞ்
செய்தனர் மொழியினும், மருளறு சிறப்பினஃ துவம மாகும்" என்பவாகலான். சான்றோர்
குற்றம் விளங்குந் தோற்றம்போலக் கதிர் மண்டிலம் மறுநிறங் கிளரத் தண்
கதிரைப் பால் சொரிவதுபோல் இடையிடைச் சொரிய வென்க. திங்களுக்கு வெள்ளிக்குடமும்
தண்கதிர்க்குப் பாலும் உவமை.
1--15
உருவு கொண்ட மின்னே போல-பெண்ணுருவங்கொண்ட மின்னலைப் போலவும்,
திருவில் இட்டுத் திகழ்தரு மேனியள் - இந்திர வில்லைப்போலவும ஒளிவிட்டு
விளங்குகின்ற திருமேனியை யுடைய அத்தெய்வம், ஆதிமுதல்வன் அறவாழி ஆள்வோன்
பாத பீடிகை பணிந்தனள் ஏத்தி - அறவாழியினை உருட்டுகின்ற ஆதி முதல்வனது பாதபீடிகையை
வணங்கித் துதித்து, பதியகத்து உறையும் ஓர் பைந்தொடியாகி-அப் பதியிலுறைகின்ற
ஒரு பெண் வடிவுகொண்டு, சுதமதி நல்லாள் தன்முகம் நோக்கி - சுதமிதியின் முகத்தை
நோக்கி, ஈங்கு நின்றீர்என் உற்றீர் என-ஈண்டு நிற்கின்றவர்களே நீவிர்
அடைந்த துன்பம் யாது என வினவ;
உருவு கொண்ட மின்:இல்பொருளுவமை. மின்போலவும்
திருவில் போலவும் என்க. திருவில் - வானவில். 3
திருவி லிட்டுத் திகழ்தரு மேனியன்" என வருதல் காண்க. கடவுளர் இன்ன காலத்து
இவ்வாறு தோன்றுவர் என்பது புலப்படாமையான், அங்ஙனம் தோன்றும் வானவில் அவர்க்கு
உவமையாயிற்று. திருவில் - அழகிய ஒளியென்றுமாம். ஆதி முதல்வன் - புத்தன்.
அறவாழி - அறமாகிய திகிரி. பாதபீடிகை- புத்ததேவன் திருவடி யமைந்த பீடம்;
உவவனத்திற் பளிக்கறையில்
1
குறள். 957. 2 தொல்.
பொருளதி. 284. 3
சிலப். 15:156.
|