பக்கம் எண் :

பக்கம் எண் :88

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

உள்ளது. பணிந்தனள் : முற்றெச்சம். முன்னரும் 1"பதியகத் துறையுமோர் பைந்தொடி யாகி" என வந்தமை காண்க. நின்றீர் : வினைப்பெயர் ; அது மணிமேகலையையும் உளப்படுத்திற்று.

16. ஆங்கு அவள் ஆங்கு அவன் கூறியது உரைத்தலும்-அக்காலைச் சுதமதி அவ் வுதயகுமரன் மொழிந்ததனைக் கூறிய வளவில்; அவன் கூறியது - சித்திராபதியாற் சேர்தலுமுண்டு என்பது.

17-26. அரசிளங் குமரன் ஆயிழை தன்மேல் தணியாவுள்ளம் தவிர்ந்திலன் ஆகி - மன்னவன் புதல்வன் மணிமேகலை யிடத்துக் கொண்ட ஆசை நீங்காத உள்ளத்தினைத் தவிர்ந்திலனாய், அறத்தோர் வனம் என்று அகன்றனன் ஆயினும்-தவத்தோர்களுடைய பொழில் என்று இங்கு நின்றும் நீங்கினனாயினும், புறத்தோர் வீதியில் பொருந்துதல் ஒழியான் - புறத்திலுள்ளவர்களது தெரு வின்கண்ணே சேர்தலை நீங்கான், பெருந்தெரு ஒழித்து இப்பெருவனஞ் சூழ்ந்த - ஆதலால் பெருந் தெருவுகளை விட்டு இந்தப் பெரிய சோலையைச் சூழ்ந்துள்ள, திருந்து எயிற் குடபால் சிறு புழை போகி - திருத்தமுற்ற மதிலின் மேற்றிசையினிடத்தேயுள்ள சிறிய வாயிலின் வழியே சென்று, மிக்க மாதவர் விரும்பினர் உறையும்-தவத்தான் மிக்க முனிவர்கள் விரும்பி யுறையும், சக்கரவாளக்கோட்டம் புக்கால் - சக்கரவாளக்கோட்டத்தை யடைந்தால், கங்குல் கழியினும் கடுநவை எய்தாது - அங்கே இரவினைக் கழிப்பினும் கொடிய துன்ப முண்டாகாது, அங்குநீர் போம் என்று அருந்தெய்வம் உரைப்ப - ஆகலின் நீவிர் அங்கே செல்வீராக என்று அரிய தெய்வம் கூறியருள;

அறத்றோர் துறவிகளானமையின், புறத்தோர் என்பதற்கு அவர்க்குப் புறமாகவுள்ள இல்லற நெறியினர் என வுரைத்தலும் அமையும்; புறத்து ஓர் வீதியில் என்றலுமாம். புழை-நுழை வாயில். கழியினும் - கழிப்பினும். இனி, ஆண்டே இராக்காலம் கழிவதாயினும் எனலுமாம் கடுநவை - உதயகுமரனாற் பற்றப்படுதல்.

27-33. வஞ்ச விஞ்சையன் மாருத வேகனும் அமசெஞ்சாயல் நீயும் அல்லது-வஞ்சமுடைய விஞ்சையனாகிய மாருதவேகன் என்பானும் அழகிய சிவந்த மென்மைத் தன்மையினையுடைய நீயும் அன்றி, நெடுநகர் மருங்கின் உள்ளோர் எல்லாம் - இப் பெரிய நகரின்கண் உள்ளோரனைவரும், சுடுகாட்டுக் கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்டம் என்பதேயன்றி வேறு பெயர் கூறார், சக்கரவாளக்கோட்டம் அஃது என - அதனைச் சக்கர வாளக்கோட்டம் என்று, மிக்கோய் கூறிய உரைப்பொருள் அறியேன் - மேம்பாடுடைய நீ கூறிய மொழியின் பொருளை அறியேன்,


1 மணி. 5: 96 .