பக்கம் எண் :

பக்கம் எண் :89

Manimegalai-Book Content
6. சக்கரவாளக்கோட்டமுரைத்த காதை

ஈங்கு இதன் காரணம் என்னையோ என - இங்ஙனம் கூறுவதன் காரணம் யாதோ என்று சுதமதி கேட்ப;

வஞ்ச விஞ்சையன் என்றாள், தன்னைக் 1கவர்ந்து சென்று பின்னர்த் தன்னைவிட்டுப் பிரிந்தமையான். நெடுநகர்-காவிரிப்பூம்பட்டினம்.

34-6. ஆங்கு அதன் காரணம் அறியக் கூறுவல் - அஃது அப்பெயர் பெற்றதன் காரணத்தைத் தெளிய உரைப்பேன், மாதவி மகளொடு வல்லிருள் வரினும் நீகேள் என்றே நேரிழை கூறும் - மிகுந்த இருளையுடைய யாமம் வரினும் நீ மாதவி மகளுடன் அதனைக் கேட்பாயாக என்று மணிமேகலா தெய்வம் கூறுகின்றது;

36-8. இந் நாமப் பேரூர் தன்னொடு தோன்றிய - பகைவர்க்கு அச்சத்தை விளைக்கும் இப் பெரிய நகரத்தோடே உண்டாய, ஈமப் புறங்காடு ஈங்கு இதன் அயலது - பிணஞ்சுடும் விறகடுக்கினையுடைய சுடுகாடு இவ் வுவவனத்தின் பக்கத்தது; நாமம் - புகழுமாம். இதன் - இவ் வுவவனத்தின்.

39-49. ஊரா நல்தேர் ஓவியப்படுத்து - ஓவியம்போல விமானம் விசும்பின்கண்ணே நிற்குமாறு செய்து, தேவர் புகுதரூஉம் செழுங் கொடி வாயிலும் - விண்ணவர் நுழைந்து செல்லுஞ் செழுங் கொடியினையுடைய வாயிலும், நெல்லும் கரும்பும் நீரும் சோலையும் நல்வழி எழுதிய நலங்கிளர் வாயிலும் - நெற்பயிரும் கரும்பும் பொய்கையும் பொழிலும் நன்கனமெழுதிய நலஞ்சிறந்த வாயிலும் வெள்ளி வெண்சுதை இழுகிய மாடத்துள் - மிக்க வெண்மை யுடைய சுதையாற் பூசப்பட்ட மாடத்தில், உரு எழுதா வெள்ளிடை வாயிலும் - வடிவங்கள் எழுதப்பெறாத வெளியான இடத்தினையுடைய வாயிலும், மடித்த செவ்வாய்க் கடுத்த நோக்கில் தொடுத்த பாசத்துப் பிடித்த சூலத்து - மடிக்கப்பட்ட சிவந்த வாயையும் சினந்த நோக்கையும் பிறரைத்தொடுத்த பாசத்தையும் கையிற் பிடித்த சூலப்படையையுமுடைய, நெடுநிலை மண்ணீடு நின்ற வாயிலும் - நீண்ட தோற்றத்தையுடைய பூதவடிவம் நிற்கின்ற வாயிலும் ஆகிய, நாற்பெரு வாயிலும் பாற்பட்டு ஓங்கிய - நான்கு பெரிய வாயில்களும் பகுதிப்பட்டு உயர்ந்த, காப்புடை இஞ்சிக் கடி வழங்கு ஆரிடை - காவலுடைய மதில் சூழ்ந்த பேய்கள் நடமாடுகின்ற அரிய இடத்தில்;

ஊராத் தேர்-பாகராற் செலுத்தப்படாது தானே செல்லுந் தேர், விமானம். விமானத்துடன் தேவர் புகுவதாக ஓவியப்படுத்த வாயில் என்றலுமாம். நீர் - பொய்கை முதலியன. மண்ணீடு - சுதையாற் செய்யப்பட்ட பாவை; "மண்ணீட்டிற் பண்புற வகுத்து," "ஈங்கிம் மண்ணீட்டு" (6: 200; 18 - 156.) என மேல் இந்நூலுள் வருதல் காண்க. கடி - பேய்.


1 ம ணி. 3; 28 - 41