|
50--3. உலையா உள்ளமோடு
உயிர்க்கடன் இறுத்தோர்-தளராத உள்ளத்தோடு உயிராகிய கடனைக் கொடுத்தோர்களின்,
தலை தூங்கு நெடுமரம் தாழ்ந்து புறஞ்சுற்றி - தலைகள் தொங்குகின்ற நீண்ட மரங்கள்
தாழ்ந்து புறத்தே சூழப்பெற்று, பீடிகை ஓங்கிய பெரும் பலி முன்றில் காடமர்
செல்வி கழிபெருங் கோட்டமும்- பெரிய பலிபீடம் ஓங்கிய முன்றிலையுடைய காடுகிழாளின்
மிகப் பெரிய கோயிலும் ;
உயிர்க்கடன்
இறுத்தலைச் சிலப்பதிகாரத்து 1இந்திர
விழவூரெடுத்த காதையானும் அறிக. இஃது அவிப்பலி எனப்படும். பலி கொடுப்போர்
சிகையை மரத்தில் முடிந்துவிட்டுத் தலையை அரிவராகலின் "தலைதூங்கு நெடுமரம்"
என்றார் ; 2"வீங்குதலை நெடுங்கழையின்
மிசைதோறுந் திசைதோறும் விழித்து நின்று, தூங்குதலை, சிரிப்பன கண் டுறங்குதலை
மறந்திருக்குஞ் சுழல்கட் சூர்ப்பேய்" என்பது காண்க. காடமர் செல்வி - காடுகிழாள்
; துர்க்கை.
54--9. அருந்தவர்க்கு
ஆயினும் அரசர்க்கு ஆயினும், ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர்க்கு ஆயினும்-அரிய
தவத்தானுயர்ந்தோர்க்கும் அரசர்க்கும் கணவனுடன் ஒருங்கே உயிர்நீத்த கற்புடை
மகளிர்க்கும், நால்வேறு வருணப் பால்வேறு காட்டி - நால்வகை மரபின் பகுதி வேறுபாட்டினைக்
காட்டி, இறந்தோர் மருங்கில் சிறந்தோர் செய்த-இறந்தோர்களின் உடலைப்
புதைத்தவிடத்தே அவர்கட்குச் சிறந்தோர் அமைத்த, குறியவும் நெடியவும் குன்று
கண்டன்ன சுடுமண் ஓங்கிய நெடுநிலைக் கோட்டம்-குறியனவும் நெடியனவும் ஆகிய குன்றுகளைக்
கண்டாற்போன்றனவாய்ச் செங்கற்களாற் செய்யப்பட்டு உயர்ந்த கோட்டங்களும்
ஆயினும்
என்பது ஓர் எண்ணிடைச்சொல்; 3"பொதியி
லாயினும் இமய மாயினும்......புகாரேயாயினும்" என்புழிப்போல. சிறந்தோர்
- உரிமையுடையோர். சுடுமண்-செங்கல். கோட்டம்-அறை ; கோயிலுமாம்.
60--5.
அருந்திறல் கடவுள் திருந்து பலிக் கந்தமும் - அரிய திறலையுடைய
கடவுளுடைய திருந்திய பலியிடுதற்குரிய தூண்களும், நிறைகல் தெற்றியும் - நிறுத்தப்பட்ட
கல்லாலாகிய திண்ணையும், மிறைக்களச் சந்தியும்-வளைந்த இடத்தினையுடைய பல
வழிகளுஞ் சேர்ந்த சந்துகளும், தண்டும் மண்டையும் பிடித்துக் காவலர் உண்டு கண்படுக்கும்
உறையுட் குடிகையும் - கையிற் பிடிக்கும் கோலும் உண்ணும் கலமும் பிடித்து ஈமங்
காப்போர் உண்டு துயிலும் உறைவிடமாகிய குடில்களும், தூமக்கொடியும் சுடர்த் தோரணங்களும்-புகையொழுங்காகிய
கொடியும் சுடராகிய தோரணங்களும்,
1
சிலப். 5 : 88-4. 2
கலிங்க. கோயில் 21. 3
சிலப். 1:14-6.
|