|
ஈமப்பந்தரும் யாங்கணும் பரந்து - ஈமத்தில் இட்ட பந்தர்களும் எவ்விடத்தும்
பரக்கப்பெற்று ;
கந்தின்கண் தெய்வமுறைதலை
1"கலிகெழு
கடவுள் கந்தங் கைவிட" என்பதனானும் அறிக. மிறை - வளைவு ; 2மிறைக்கொளி
திருத்தினானே" என்றார் பிறரும். மண்டை-உண்டற்குரிய மண்கலம் ; இரக்குங்
கலமுமாம் ; 3;"ஏலாது கவிழ்ந்த
என் இரவன் மண்டை" என்பது புறம். குடிகை-குடிசை. சுடர்-தீக்கொழுந்து; விளக்குமாம்.
66-9. சுடுவோர்
இடுவோர் தொடுகுழிப் படுப்போர் - பிணங்களைச் சுடுவோரும் வாளா இட்டுப்போவோரும்
தோண்டப்பட்ட குழியிலிடுவோரும், தாழ்வயின் அடைப்போர் தாழியிற் கவிப்போர்
- தாழ்ந்த இடங்களில் அடைத்து வைப்போரும் தாழியினாலே கவிப்போரும், இரவும்
பகலும் இளிவுடன் தரியாது - இரவும் பகலும் அருவருப்புடன் தங்காமல், வருவோர்
பெயர்வோர் மாறாச் சும்மையும் -வருவோரும் போவோரு மாகியவர்களின் நீங்காத
ஒலியும் ;
தாழ்வயின்
- பள்ளமாகிய இடம். தாழியிற் கவித்தலைப் புற நானூற்றின் 227, 237, 255,
363-ஆம் செய்யுட்களால் அறிக. இது முழுமக்கட் டாழி எனப்படும். சுடுவோர் முதலியோராய்
வருவோர் பெயர்வோர் என்க.
70--9. எஞ்சியோர்
மருங்கின் ஈமஞ்சாற்றி நெஞ்சு நடுக்குறூஉம் நெய்தல் ஓசையும்-உயிர் வாழ்ந்திருப்போரிடம்
ஈமம் உண்டென்பதைக் கூறி உள்ளம் நடுங்குமாறு புரியும் நெய்தற்பறையின் ஒலியும்,
துறவோர் இறந்த தொழுவிளிப் பூசலும்-துறவியர் இறந்ததனாற் போந்த துதிமுழக்கமும்,
பிறவோர் இறந்த அழுவிளிப் பூசலும்-இல்லறத்தோர் இறந்ததனாலாகிய அழுகை யொலியும்,
நீள்முக நரியின் தீவிளிக்கூவும்-நீண்ட முகத்தையுடைய நரியின் தீய ஒலியினையுடைய
கூப்பீடும். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும்-இறப்போரை யழைக்கும் பேராந்தையின்
குரலும், புலவூண் பொருந்திய குராலின் குரலும் - புலாலாகிய உணவைப் பொருந்திய
கோட்டானின் ஒலியும், ஊண்தலை துற்றிய ஆண்டலைக் குரலும் - உணவாகத் தலை முளையைக்
கடித்துண்ட ஆண்டலைப் பறவையின் முழக்கமும், நன்னீர்ப் புணரி நளிகடல் ஒதையின்
இன்னா இசைஒலி என்றும் நின்று அறாது-தூநீர்ச் சேர்க்கை யினையுடைய செறிந்த
கடல் ஓசையைப்போல் இன்னாதனவாகிய முழக்கம் என்றும் நின்று நீங்காமல் ;
நெய்தல்
- சாப்பறை ; அஃது ஈமஞ்சாற்றுதலை
4"மணங்கொண்டீண்,
டுண்டுண்டுண் டென்னும் உணர்வினாற் சாற்றுமே, தொண்டொண்டொண் ணென்னும் பறை"
என்பதனாலுமறிக. முன் துறவோர் என்றமையின் பிறவோர் இல்லறத்தாராயிற்று.
தொழுவிளியாகிய
1
புறம். 52. 2
சீவக-284. 3 புறம்.
189.
4
நாலடி. 25.
|