|
154-6. என் உயிர்கொண்டு இவன் உயிர் தந்தருளில்-என்னுடைய உயிரைப்
பெற்று என் மகனது உயிரைத் தந்தருள்வாயானால், என் கண்ணில் கணவனை இவன் காத்து
ஓம்பிடும்-கண்ணிழந்த என் கணவனை இவன் பாதுகாப்பான் ஆகலின், இவன் உயிர்
தந்து என் உயிர் வாங்கு என்றலும்-இவன் உயிரை அளித்து எனது உயிரை வாங்குவாயாக
என்று கோதமை கூறியவளவில் : காத்து ஓம்பிடும்: ஒருபொருட் பன்மொழி.
157-67. முது
மூதாட்டி இரங்கினள் மொழிவோள் - சம்பாபதி இரக்கமுற்றுக் கூறுகின்றவள், ஐயம்
உண்டோ ஆருயிர் போனால் செய்வினை மருங்கில சென்று பிறப்பு எய்துதல்-அரிய
உயிரானது உடம்பை விட்டு நீங்கினால் தான் செய்த வினையின்வழியேசென்று வேறு
பிறப்படைதலில் ஐயம் உண்டோ, ஆங்கது கொணர்ந்து நின் ஆரிடர் நீக்குதல்-சென்ற
அவனுயிரைக் கொண்டுவந்து நின்னுடைய அரிய துன்பத்தை நீக்குதல், ஈங்கு எனக்கு
ஆவ தொன்று அன்று - எனக்கு இயல்வதொரு காரியமன்று, நீ இரங்கல்-நீ வருந்தற்க,
கொலை அறம் ஆம் எனும் கொடுந்தொழில் மாக்கள் அவலப்படிற்று உரை ஆங்கது மடவாய்
- மடந்தையே நீ கூறிய அது கொலை புரிவதை அறம் என்று கூறும் கொடுந் தொழிலையுடைய
மாக்களின் துன்பத்தைத் தரும் பொய்யுரை யாகும், உலக மன்னவர்க்கு உயிர்க்கு
உயிர் ஈவோர் இலரோ - உலகத்தையாள்கின்ற அரசர்கட்கு உயிர்க்கு உயிர் கொடுப்போர்
ஒருவருமிலரோ, இந்த ஈமப் புறங்காட்டு அரசர்க்கு அமைந்தன ஆயிரம் கோட்டம்
- இந்தச் சுடுகாட்டின்கண் அரசர்களுக்கு அமைந்த கோட்டங்கள் அளவற்றன ஆகலின்,
நிரயக் கொடு மொழி நீ ஒழி என்றலும்-நிரயத்திற்கேதுவாகிய கொடிய மொழிகளை
நீ விடுவாயாக என்று தெய்வம் கூறுதலும்;
முது மூதாட்டி-மிக்க முதுமையை உடையாள். மருங்கு
- வழி; 1"செய்வினை வழித்தா
யுயிர்செலு மென்பது, பொய்யில் காட்சியோர் பொருளுரை யாதலின்" என்பது ஈண்டறியற்பாலது.
மன்னவர்க்கு உயிர்க்குயி ரீவோர் - அரசர் உயிருக்கு மாறாகத் தம்முயிரைக்
கொடுப்போர். ஆயிரம்-அளவில்லன என்னும்பொருட்டு. கோட்டம்-அறை.
168-71.
தேவர் தருவர் வரம் என்று ஒருமுறை நான்மறை அந்தணர் நன்னூல் உரைக்கும் - தேவர்கள்
வரந்தருவர் என்று அந்தணர்களது நல்ல நூலாகிய நான்மறை ஒருபெற்றியே கூறா நிற்கும்;
அங்ஙனமாகவும், மாபெருந் தெய்வம் நீ அருளாவிடின்- மிகப்பெருந் தெய்வமாகிய
நீ அருள்புரியாவிட்டால், யானோ காவேன் என் உயிர் ஈங்கென - யான் என் உயிரை
ஈண்டுக் காப்பாற்றாமல் விடுவேன் என்று கோதமை கூற;
1
சிலப். 28 : 167-8.
|