|
172-5. ஊழிமுதல்வன் உயிர்தரின் அல்லது-ஊழிமுதல்வனாகிய இறைவன்
உயிரை அளித்தாலல்லது, ஆழித்தாழி அகவரைத் திரிவோர் தாம் தரின்-சக்கரவாளமாகிய
தாழியின்கண் திரியுந் தேவர்கள் தர வல்லவராயின், யானும் தருகுவன் மடவாய்-
மடவாய் யானும் நின் மகனுயிரைத் தருவேன், ஈங்கு என் ஆற்றலும் காண்பாய் என்று
- என்னுடைய ஆற்றலையும் நீ இப்பொழுது காண்பாயாக என்று கூறி;
ஊழிமுதல்வன்
- உலக முதல்வன்; இவனை மகாப்பிரமா என்பர். தாழிபோற் கவிந்துள தென்பார்
தாழி யென்றார். முதல்வன் தரின் அல்லது திரிவோர் தாரார். அவர் தரின்
யானுந் தருகுவன் என விரித்துரைக்க.
176-85.
நால்வகை மரபின் அரூபப் பிரமரும் - நான்கு வகைப்பட்ட முறைமையினையுடைய அரூபப்
பிரமர்களையும், நானால் வகையின் உரூபப் பிரமரும்-பதினாறு வகைப்பட்ட உரூபப்
பிரமர்களையும், இருவகைச் சுடரும்-ஞாயிறு திங்கள்களையும், இரு மூவகையில் பெருவனப்பு
எய்திய தெய்வத கணங்களும் - ஆறு வகையினையுடைய மிக்க அழகு விளங்குகின்ற தெய்வ
கணங்களையும், பல்வகை அசுரரும் படுதுயர் உறூஉம் எண்வகை நரகரும்- பல திறப்பட்ட
அசுரர்களையும் மிக்க துன்பத்தை அனுபவிக்கின்ற எண்வகைப்பட்ட நரகர்களையும்,
இரு விசும்பு இயங்கும் பன்மீன் ஈட்டமும் நாளும்கோளும்-அகன்ற வானின்கண் திரியும்
பல மீன்களின் தொகுதிகளையும் நாட்களையும் கோட்களையும், தன் அகத்து அடக்கிய
சக்கரவாளத்து - தன் உள்ளே அடக்கிக் கொண்டிருக்கும் சக்கரவாளத்தில், வரந்
தரற்குரியோர்தமை முன் நிறுத்தி - வரந்தருவதற் குரியவர்களாகிய தேவர்களைக்
கோதமைக்கு முன்னே நிறுத்தி, அரந்தை கெடும் இவள் அருந்துயர் இதுவென - இவளுற்ற
அரிய துயர் இது இத்துயரினைப் போக்குவீராக என்று சம்பாபதி கூற;
உலகம் முப்பத்தொன்று என்றும், அவற்றுள்
முதலாவதாகிய நரக லோகத்தின் பகுதிகளாகிய மகாநிரயம், இரௌரவம், காலசூத்திரம்,
சஞ்சீவனம், மகாவீசி, தபனம், சம்பிரதாபனம், சங்கதம் என்னும் எட்டு நரகங்களிலும்
நரகர்கள் வசிப்பரென்றும், ஆறாவது முதலிய அறுவகை உலகங்களிலும் அறுவகைத்
தெய்வகணங்கள் வசிப்பரென்றும், பன்னிரண்டாவது முதலிய பதினாறு உலகங்களில்
பதினறுவகை உருவப்பிரமர்களும், இருபத்தெட்டாவது முதலிய நான்கு உலகங்களில்
நால்வகை அருவப்பிரமர்களும் வசிப்பரென்றும் கூறுவர். ஒன்று முதல் மேன்மேலுலகங்களில்
வசிப்போர் படிப்படியே உயர்ந்தோராவ ரென்பது அறிக. கெடும் : செய்யுமென்னுஞ்
சொல் ; ஏவலில் வந்தது.
|