|
184-1. சம்பாபதி தான் உரைத்த அம்முறையே - காவற்றெய்வ மாகிய
சம்பாபதி கூறிய முறைப்படியே, எங்கு வாழ் தேவரும் உரைப்பக் கேட்டே - உலகெங்கணுமுள்ள
தேவர்களும் கூறக் கேட்டு, கோதமை உற்ற கொடுந்துயர் நீங்கி - கோதமை தான்
அடைந்த கொடிய துன்பத்தினின்றும் நீங்கி, ஈமச்சுடலையில் மகனை இட்டு இறந்தபின்
- இடுகாட்டில் அடுக்கப்பட்ட விறகினை யுடைய அழலின்கண் மகனை இட்டுத் தானும்
இறந்த பின்னர் ;
சம்பாபதி
கூறியதாவது ஊழி முதல்வன் உயிர்தரினல்லது ஏனோர் தாரார் என்றது. தேவர் என்றது
அருவப்பிரமர் இறுதியாகவுள்ள மேலுலகத்தவர் அனைவர்க்கும் பொதுப்பெயர்.
190-202. சம்பாபதி
தன் ஆற்றல் தோன்ற - சம்பாபதியினுடைய பேராற்றல் வெளிப்படுமாறு, எங்கு வாழ்
தேவரும் கூடிய இடந்தனில்-எங்குமுறைகின்ற தேவர்களெல்லோரும் கூடிய அந்த இடத்தில்,
சூழ்கடல் வளைஇய ஆழியங்குன்றத்து - பெரும்புறக் கடலாற் சூழப்பட்ட சக்கரவாள
மலையின் உட்பட்ட இடத்தில், நடுவு நின்ற மேருக்குன்றமும் - நடுவிடத்தே நின்றதாகிய
மேருமலையும், புடையின்நின்ற எழுவகைக் குன்றமும்-அதன் பக்கத்தே சூழ்ந்து நின்ற
எழுவகைக் குலமலைகளும், நால்வகை மரபின் மாபெருந்தீவும்-நான்கு வகைப்பட்ட மரபினையிடைய
மிகப்பெரிய தீவுகளும், ஓரீ ராயிரம் சிற்றிடைத்தீவும் - அவற்றைச் சூழ்ந்துள்ள
இரண்டாயிரம் சிறு தீவுகளும், பிறவும் ஆங்கதன் இடவகை உரியன-பிறவுமாகிய அதன்
உரிய இடவகைகளை, பெறு முறை மரபின் அறிவுரக் காட்டி-அவை அமைந்த முறைப்படி காண்போர்க்கு
அறிவுரை அமைத்துக் காட்டி, ஆங்குவாழ் உயிர்களும் அவ்வுயிர் இடங்களும்-ஆங்கே
வாழும் உயிர்களையும் அவை வசிக்கும் இடங்களையும், பாங்குற மண்ணீட்டில் பண்புற
வகுத்து-அழகு பொருந்த மண்ணீடுகளாக இலக்கணப்படி வகுத்து, மிக்க மயனால் இழைக்கப்பட்ட
- அறிவின் மேம்பட்ட தெய்வத் தச்சனால் இயற்றப்பட்ட, சக்கரவாளக்கோட்டம்
ஈங்கிதுகாண்-சக்கர வாளக்கோட்டம் என்பது இதுவாகும்:
தோன்றக்கூடிய இடம் என்க; தோன்ற இழைக்கப்பட்ட
என் றியைத்தலும் பொருந்தும். மேருமலை எண்பத்தீராயிரம் யோசனை உயரமும்,
அதற்குத் தக்க பருமையும் உள்ளதென்றும், அதனைச் சூழக் குலகிரிகள் ஏழும்,
அவற்றுள் ஒவ்வொன்றனையும் சூழ்ந்து அவ்வக்கிரி யின் உயரவளவுள்ள ஆழமும்
அகலமுமுடைய ஏழு கடல்களும் உள்ளனவென்றும், இவையெல்லாவற்றையும் புறஞ் சூழ்ந்துகிடக்கும்
பெரும்புறக்கடலில் சம்புத்தீவு முதலிய நான்கு மாபெருந்தீவுகளும், அவைஒவ்வொன்றையும்
ஐந்நூறு ஐந்நூறு ஆகச்சூழ்ந்த இரண்டாயிரம் சிறு தீவுகளும் உள்ளன என்றும், சம்பத்தீவு
தெற்கிலுள்ளது என்றும்
|