| கூறுவர்; இப்பகுதிக்கு டாக்டர் உ..
வே. சாமிநாதையர் எழுதிய அரும்பதவுரை காண்க.
சிறு தீவுகள் அந்தரத்தீவுகள் என்றும் கூறப்படும்;
"அந்தரத் தீவினும் அகன்பெருந் தீவினும்" (25 : 224) என்று பின்வருதல் காண்க.
உயிர்கள் என்றது அவற்றுக்கு நிலைக்களமாகிய உடம்புகளை. இடம் என்றது நீர்,
நிலம் முதலியவற்றை. மண்ணீடு-சுதையாற் செய்யப்பட்ட பாவை முதலியன. மயன் -
அசுரத்தச்சன் என்பாருமுளர்.
203-5. இடுபிணக்கோட்டத்து
எயிற்புறம் ஆகலின் - பிணங்களை யிடுகின்ற புறங்காட்டின் மதிற்புறத்திலுள்ளது
ஆதலால் இதனை, சுடுகாட்டுக்கோட்டம் என்றலது உரையார் - சுடுகாட்டுக் கோட்ட
மென்றே கூறுவர், இதன்வரவு இது என்று இருந்தெய்வம் உரைக்க - இதனுடைய வரலாறு
இஃது என்று மணிமேகலா தெய்வம் மொழிந்தருள ;
இடுதல், சுடுதல் இரண்டினையும் ஒன்றாக அடக்கிப்
பெயர் கூறினார்.
204-14. மதன்இல்
நெஞ்சமோடு வான்துயர் எய்தி - வலியற்ற மனத்துடனே மிக்க துன்பத்தையடைந்து,
பிறந்தோர் வாழ்க்கை சிறந்தோள் உரைப்ப-பூமியிற் பிறந்தோர்களது வாழ்க்கையை
மணிமேகலை கூற, இறந்திருள் கூர்ந்த இடையிருள், யாமத்து - மிகவுஞ்செறிந்த
இருள் மிகுந்த இடையாமத்தில், தூங்குதுயில் எய்திய சுதமதி ஒழிய - மிக்க உறக்கத்தினையடைந்த
சுதமதி அவ்விடத்தில் நீங்க, பூங்கொடிதன்னைப் பொருந்தித் தழீஇ - மணிமேகலையைச்
சேரத் தழுவிக்கொண்டு, அந்தரம் ஆறா ஆறைந்து யோசனைத் தென்றிசை மருங்கில்
சென்று-விசும்பின் வழியாக முப்பது யோசனை தூரம் தென்றிசைக்கட் சென்று, திரையுடுத்த
மணிபல்லவத்திடை - கடலாற் சூழப்பட்ட மணிபல்லவமென்னும் தீவின்கண், மணிமேகலா
தெய்வம் அணியிழைதன்னை வைத்து அகன்றதுதான் - மணிமேகலையை வைத்துவிட்டு மணிமேகலா
தெய்வம்தான் நீங்கியது என்க.
மதன்-செருக்குமாம். கோட்டத்தினியல்பு கேட்டமையின்
நெஞ்சம் மதனழிந்ததென்க. வாழ்க்கை யென்றது அதன் நிலையாமையை.
மண்டிலம் சொரிய, மேனியள்
ஏதீதி நோக்கி என்னுற்றீரென, அவள் அவன் கூறிய துரைத்தலும்; அருந் தெய்வமுரைப்ப,
சுதமதி என்னை யோவென, நேரிழை கூறும் ; அங்ஙனம் கூறுகின்ற தெய்வம் இதன்
வரவு இதுவென்றுரைக்க, சிறந்தோளுரைப்ப, தெய்வம் இடை யிருள் யாமத்துச் சுதமதியொழியப்
பூங்கொடிதன்னைத் தழீஇச் சென்று மணிபல்லவத்தில் வைத்து அகன்றது என முடிக்க.
சக்கரவாளக்கோட்டமுரைத்த
காதை முற்றிற்று.
|