பக்கம் எண் :

பக்கம் எண் :102

::TVU::
7. துயிலெழுப்பிய காதை

[நிகழ்ச்சிகளும் ஆசிரியருடைய உலகியலறிவையும், கற்பனைத்திறத்தையும் புலப்படுத்துகின்றன.)]






5





10





15





20





25





30
மணிமே கலைதனை மணிபல் லவத்திடை
மணிமே கலாதெய்வம் வைத்து நீங்கி
மணிமே கலைதனை மலர்ப்பொழிற் கண்ட
உதய குமரன் உறுதுய ரெய்திக்
கங்குல் கழியிலென கையகத் தாளெனப்

பொங்குமெல் லமளியிற் பொருந்தா திருந்தோன்
முன்னர்த் தோன்றி மன்னவன் மகனே
கோல்நிலை திரிந்திடிற் கோள்நிலை திரியும்
கோள்நிலை திரிந்திடின் மாரிவறங் கூரும்
மாரிவறங் கூரின் மன்னுயி ரில்லை

மன்னுயி ரெல்லாம் மண்ணாள் வேந்தன்
தன்னுயி ரென்னுந் தகுதியின் றாகும்
தவத்திறம் பூண்டோள் தன்மேல் வைத்த
அவத்திறம் ஒழிகென் றவன்வயி னுரைத்தபின்
உவவனம் புகுந்தாங் குறுதுயில் கொள்ளும்

சுதமதி தன்னைத் துயிலிடை நீக்கி
இந்திர கோடணை இந்நகர்க் காண
வந்தே னஞ்சல் மணிமே கலையான்
ஆதிசான் முனிவன் அறவழிப் படுஉம்
ஏது முதிர்ந்த திளங்கொடிக் காதலின்

விஞ்சையிற் பெயர்த்துநின் விளங்கிழை தன்னையோர்
வஞ்சமில் மணிபல் லவத்திடை வைத்தேன்
பண்டைப் பிறப்பும் பண்புற உணர்ந்தீங்
கின்றேழ் நாளில் இந்நகர் மருங்கே
வந்து தோன்றும் மடக்கொடி நல்லான்

களிப்புமாண் செல்வக் காவற் பேரூர்
ஒளித்துரு வெய்தினும் உன்திற மொளியாள்
ஆங்கவள் இந்நகர் புகுந்த அந்நாள்
ஈங்கு நிகழ்வன ஏதுப் பலவுள
மாதவி தனக்கியான் வந்த வண்ணமும்

ஏதமில் நெறிமகள் எய்திய வண்ணமும்
உரையாய் நீயவன் என்திறம் உணரும்