பக்கம் எண் :

பக்கம் எண் :103

::TVU::
7. துயிலெழுப்பிய காதை




35





40





45





50





55





60





65
திரையிரும் பௌவத்துத் தெய்வமொன் றுண்டெனக்
கோவலன் கூறியிக் கொடியிடை தன்னையென்
நாமஞ் செய்த நன்னாள் நள்ளிருள்.

காமன் கையறக் கடுநவை யறுக்கும்
மாபெருங் தவக்கொடி ஈன்றனை யென்றே
நனவே போலக் கனவகத் துரைத்தேன்
ஈங்கிங் வண்ணம் ஆங்கவட் குரையென்
றந்தரத் தெழுந்தாங் கருந்தெய்வம் போயபின்

வெந்துய ரெய்திச் சுதமதி எழுந்தாங்
ககன்மனை யரங்கத் தாசிரியர் தம்மொடு
வகைதெரி மாக்கட்கு வட்டணை காட்டி
ஆடல் புணர்க்கும் அரங்கியன் மகளிரில்
கூடிய குயிலுவக் கருவிகண் துயின்று

பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்த் தீந்தொடை
கொளைவல் லாயமோ டிசைகூட் டுண்டு
வளைசேர் செங்கை மெல்விர லுதைத்த
வெம்மைவெய் துறாது தன்மையிற் றிரியவும்
பண்பில் காதலன் பரத்தமை நோனாது

உண்கண் சிவந்தாங்கு ஒல்குகொடி போன்று
தெருட்டவுந் தெருளா தூடாலொடு துயில்வோர்
விரைப்பூம் பள்ளி வீழ்துணை தழுவவும்
தளர்நடை யாயமொடு தங்கா தோடி
விளையாடு சிறுதேர் ஈர்த்துமெய் வருந்தி

அமளித் துஞ்சும் ஐம்படைத் தாலிக்
குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வர்க்குக்
காவற் பெண்டிர் கடிப்பகை யெறிந்து
தூபங் காட்டித் தூங்குதுயில் வதியவும்
இறையுறை புறவும் நிறைநீர்ப் புள்ளும்

காவுறை பறவையும் நாவு ளழுந்தி
விழவுக்களி யடங்கி முழவுக்கண் துயின்று
பழவிறன் மூதூர் பாயல்கொள் நடுநாள்
கோமகன் கோயிற் குறுநீர்க் கன்னலின்
யாமங் கொள்பவர் ஏத்தொலி யரவமும்

உறையுணின் றொடுங்கிய உண்ணா உயக்கத்து