பக்கம் எண் :104
::TVU::
70
75
80
85
90
95
100
நிறையழி யானை நெடுங்கூ விளியும்
தேர்வழங்கு தெருவுஞ் சிற்றிடை முடுக்கரும்
ஊர்காப் பாளர் எறிதுடி ஓதையும்
முழங்குநீர் முன்றுறைக் கலம்புணர் கம்மியர்
துழந்தடு கள்ளின் றோப்பியுண் டயர்ந்து
பழஞ்செருக் குற்ற அனந்தர்ப் பாணியும்
அரவாய்க் கடிப்பகை ஐயவிக் கடிப்பகை
விரவிய மகளிர் ஏந்திய தூமத்துப்
புதல்வரைப் பயந்த புனிறுநீர் கயக்கம்
தீர்வினை மகளிர் குளனா டரவமும்
வலித்த நெஞ்சின் ஆடவ ரின்றியும்
புலிக்கணத் தன்னோர் பூத சதுக்கத்துக்
கொடித்தேர் வேந்தன் கொற்றங் கொள்கென
இடிக்குரன் முழக்கத் திடும்பலி யோதையும்
ஈற்றிளம் பெண்டிர் ஆற்றாப் பாலகர்
கடுஞ்சூன் மகளிர் நெடும்புண் உற்றோர்
தந்துயிர் கெடுக்கும் மந்திர மாக்கள்
மன்றப் பேய்மகள் வந்துகைக் கொள்கென
நின்றெறி பலியின் நெடுங்குர லோதையும்
பல்வே றோதையும் பரந்தொருங் கிசைப்பக்
கேட்டுளங் கலங்கி ஊட்டிரு ளழுவத்து
முருந்தேர் இளநகை நீங்கிப் பூம்பொழில்
திருந்தெயிற் குடபாற் சிறுபுழை போகி
மிக்கமா தெய்வம் வியந்தெடுத் துரைத்த
சக்கர வாளக் கோட்டத் தாங்கண்
பலர்புகழ் திறந்த பகுவாய் வாயில்
உலக அறவியின் ஒருபுடை இருத்தலும்
கந்துடை நெடுநிலைக் காரணம் காட்டிய
அந்தி லெழுதிய அற்புதப் பாவை
மைத்திடங் கண்ணான் மயங்கினள் வெருவத்
திப்பிய முரைக்குந் தெய்வக் கிளவியின்
இரவி வன்மன் ஒருபெரு மகளே
தூரகத் தானைத் துச்சயன் றேவி
தயங்கிணர்க் கோதை தாரை சாவுற